பக்கம்:வழிகாட்டி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 143

வானப் பரப்பிலே சிறகை அகல விரித்து மனங் கொண்ட மட்டும் பறந்து திரிந்த பறவை நிலத்திற்கு இறங்கி வந்ததுபோல நக்கீரர் இப்போது தம்மையும் எதிர் நிற்கும் புலவனையும் எண்ணும் நிலைக்கு வருகி றார். இவ்வளவு சொன்னேனே இவை என் அனுபவத் தால் உணர்ந்த உண்மை. காட்டிலும், மலையிலும், பூவிலும், புனலிலும், முனிவர் உள்ளத்திலும் குறமகள் பூசையிலும் அவன் இருப்பது வியப்பாகத் தோற்றலாம். முருகன் உண்மை அதுதான் அப்பா. இதனை அவன் அருளால் நான் அறிந்தேன். அறிந்தவாறே சொன் னேன்' என்று ஆனந்தவெறியிலே பேசுகிறார். பிறகு, 'இவ்வளவு இடங்களில் நான் எந்த இடத்துக்குப் போவது?" என்று புலவன் நினைப்பான் அல்லவா? இவ்வளவு சொல்லி வந்தது அவனுக்கு வழிகாட்டத் தானே? அந்தக் காரியத்துக்கு வருகிறார்.

'இவ்வளவு இடங்களைக் கூறியது உன்னை மயங்க வைக்க அல்ல. பல பல இடங்களில் முருகன் இருக்கிறான். உனக்கு எது அணுகும் நிலையில் இருக் கிறதோ, எங்கே திருவருள் கூட்டுவிக்கிறதோ, அங்கே போ. குறத்தி பாடும் இடமாயிற்றே என்று தாழ்வாக எண்ணவேண்டாம். காடு அல்லவா என்று அஞ்ச வேண்டாம். இத்தனை இடங்களில் எந்த இடமாக இருந்தாலும் சரி, நீ உள்ளன்போடு சென்றால் முருகனைக் காணலாம்” என்று தைரியமூட்டி, எப்படிக் கண்டு வழிபட வேண்டும் என்பதையும் சொல்லப் புகுகிறார்.

அப்பா, நான் சொன்ன அந்த அந்த இடங்க ளானாலும் சரி, வேறு இடங்களானாலும் சரி, முருகனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/145&oldid=643812" இலிருந்து மீள்விக்கப்பட்டது