பக்கம்:வழிகாட்டி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i44 வழிகாட்டி

தரிசனம் செய்வதற்கு உரிய இடம் இது என்று முதலில் நிச்சயம் செய்துகொண்ட இடத்தில் முகமும் அகமும் மலர்ந்து நீ துதிப்பாயாக. கைகளைக் குவித்து அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணிக் கீழே விழுந்து வணங்கு.

ஆண்டாண்டு ஆயினும் ஆக, காண்தக முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் கால்உற வணங்கி. (நான் கூறிய அவ்வவ்விடங்களானாலும் (பிற இடங்களானாலும்) தரிசனத்துக்குப் பொருத்தமாக முந்தி நீ கண்ட இடத்தில் முகம் விரும்பித் துதித்து, கைகுவித்துப் புகழ்ந்து காலில் விழுந்து பணிந்து.)

விழுந்து எழுந்து அவனைத் துதிப்பாயாக. அவன் பெருமை பாட இனிப்பதாதலால் பல பல வாக அவனை வாழ்த்தலாம். எனக்குத் தெரிந்தமட்டில் சில வற்றைச் சொல்கிறேன்.

திருவவதாரம் - முருகன் திருவவதாரம் செய்த வரலாறு மிகவும் வியக்கத்தக்க கதை. அந்தக் கதை பழங்கால முதல் வெவ்வேறு விதமாக வழங்கி வருகிறது.

சங்க காலத்து நூல்களில் ஒன்றாகிய பரிபாடலில் முருகன் திருவவதாரம் பின்வருமாறு காணப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியாரோடு இன்புற்றிருந்த போது இந்திரன் வந்து, அந்தச் செயலை நிறுத்தவேண்டு மென்று வேண்டினான். அதற்கு இணங்கிய இறைவன் அப்போது வெளிப்பட்ட கருவைச் சேதித்து இந்திரன் கையிலே கொடுத்தான். அவன் அதை ஏழு முனிவர் களிடத்திலே அளித்தான். அந்த முனிவர்கள் தங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/146&oldid=643813" இலிருந்து மீள்விக்கப்பட்டது