பக்கம்:வழிகாட்டி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 14S

மாற்றோர் கூற்றே! (பகைவர்களுக்கு யமனைப் போன்றவனே!) வீரமும் வெற்றி மிடுக்கும் உடையவனாகி மாற்றோர் கூற்றாக இருப்பதற்குக் காரணம், அவன் யாவர்க்கும் வெற்றியைத் தரும் பிராட்டியின் புதல்வன், வெல்லுகின்ற போர்களிலே புகழப்படுபவள் கொற் றவை; துர்க்காதேவி. வென்றவர்கள் அந்தத் தேவியை வழிபட்டுப் போற்றுவார்கள். எனவே, வெற்றிக்கும் வெல்லும் போருக்கும் துணையாக நிற்கும் தெய்வம் கொற்றவை. அந்தக் கொற்றவையின் புதல்வன் முருகன். # -

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! (வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய துர்க்கையின் புதல்வனே!)

சாந்தமயமான உருவோடு திரு அவதாரம் செய்து சிவபெருமானுக்கு இன்பத்தை ஆக்கியவள் மலை மகள்; அவளுக்குப் புதல்வன் முருகன். வீரம் செறிந் தவள் துர்க்கை. அவளுக்கும் புதல்வன் முருகன். இவ்வாறு கூறுதல் முரண்பாடன்றோ என்று தோற்றும். மலைமகளும் துர்க்காதேவியும் பராசக்தியின் வெவ் வேறு அம்சங்கள். முருகன் அந்த மூலமாகிய சக்திக்கே குமரன். ஆதலால் பராசக்தியின் பல்வேறு அவதாரங் களுக்கும் அவன் புதல்வனே ஆகிறான். எல்லா அவதாரங்களுக்கும் காரணப் பொருளாகிய பழமையிலும் பழைய சக்தியாகி நிற்கும் பிராட்டி யாரோ அந்தப் பழையவளுடைய குழந்தை முருகன். அவள் பேரழகி; இழையெல்லாம் அணிந்த சிறப்பை உடையவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/151&oldid=643818" இலிருந்து மீள்விக்கப்பட்டது