பக்கம்:வழிகாட்டி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - வழிகாட்டி

என்ற பெயர் வழங்குமென்றும் கூறுவர். தமிழில் அவன் இலக்கண நூல் இயற்றியதாகத் தெரியவில்லை யாயினும், இலக்கண இலக்கியங்களை அகத்திய முனி வருக்கு உரைத்தவனென்ற செய்தியைப் பல இடங் களிலே காணலாம். -

இதைவிடப் பெரிது ஒன்று உண்டு. இலக்கண நூலை மதிப்பிட்டு அறியும் புலவன் அவன். இறை யனாரகப் பொருள் உரை வெளிப்பட்டட கதை இங்கே நினைப்பதற்குரியது.

கடைச்சங்க காலத்தில் ஒரு சமயம் பாண்டி நாட்டில் பஞ்சம் வந்துவிட்டது. அது பன்னிரண்டு ஆண்டு இருந்ததாம். தன் நாட்டில் பஞ்சம் வந்தது தெரிந்த பாண்டிய மன்னன், அதனைப் போக்கத் தன்னால் இயன்ற காரியங்களையெல்லாம் செய்ய லானான். தன் குடிமக்களுக்கு வேண்டிய உதவிகளை யெல்லாம் செய்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 'நம் குடிமக்கள் தம்முடைய ஊரை விட்டுப் போகமாட்டார்கள். பஞ்சகாலத்துக்கு ஏற்றபடி அடங்கி வாழ்வார்கள். ஆனால் சங்கப் புலவர்களையும் அப்படி வாழச் செய்வது அபசாரம். அவர்களுக்கு எவ் வகையிலும் குறைவு நேர்தல் கூடாது. அவர்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆகையால் தங்களுக்கு உவப்பான இடங்களிலே போய் இருந்து சுகமாக அவர்கள் வாழும்படிச் செய்யவேண்டும்' என்று எண்ணினான்.

உடனே புலவர்களை அணுகி, 'பெரியவர்களே இந்தப் பஞ்சகாலத்தில் வசதிகளைக் குறைத்துக் கொண்டு வாழும் அவசியம் இந்த நாட்டினருக்கு ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/154&oldid=643821" இலிருந்து மீள்விக்கப்பட்டது