பக்கம்:வழிகாட்டி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை . 157

பாண்டியன் தர்ம சங்கட நிலைக்கு உள்ளானான். இறுதியில், எந்த இறைவன் நம்குறை கண்டு இரங்கி நூலை அருளினானோ அவனிடத்திலே சென்று இதற்கு ஒரு முடிவை வேண்டலாம் என எண்ணி, சோமசுந்தரக் கடவுளிடம் சென்று தன் குறையை விண்ணப்பித்துக் கொண்டான்.

பாண்டியனது உண்மை அன்பைக் கண்ட இறைவன் அசரீரியாக, 'இந்த நகரில் வணிகர் வீதியில் உப்பூரி குடிகிழார் வீட்டில் ஐந்து வயசுள்ள பிள்ளை ஒருவன் இருக்கிறான். அவன் ஊமை. அவனுக்கு ருத்திர ஜன்மன் என்று பெயர். அவன் முருகனுடைய அவதாரம். அவனை உரிய மரியாதைகளுடன் அழைத்து வந்து உயர்ந்த பீடத்தில் இருத்தி உரைகளை வாசிக்கச் செய்தால், எதனைக் கேட்கும்போது புளகாங்கிதம் அடைந்து கண்ணிர் பெருக்குகிறானோ அதுவே மெய் யுரையென்று கொள்ளுங்கள் என்று அருளினான்.

பாண்டிய மன்னன் இறைவன் திருவருளை வியந்து, ருத்திரஜன்மனை அழைத்து வந்து சங்கத்தில் உயர்ந்த ஆசனத்தில் இருத்தித் தக்க உபசாரங்களைச் செய்வித்தான். பிறகு புலவர்கள் தாங்கள் எழுதிய உரையை வாசிக்கத் தொடங்கினார்கள். பலர் வாசித்தும் இளங்குமரன் அசையவே இல்லை. நேரம் ஆக ஆகப் பாண்டியன் உள்ளம் தத்தளித்துக் கொண்டிருந்தது. மருதன் இளநாகனார் என்ற புலவர் வாசித்தபொழுது ஒவ்வொரு சமயம் அந்தக் குமரனுக்கு உடம்பு குலுங் கியது. அப்பால் நக்கீரர் தாம் எழுதிய உரையை வாசிக்கும் பொழுது அடுத்தடுத்துப் புளகாங்கிதம் அடைந்து கண்ணிர் பெருக்கினான். உள்ளே பெருகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/159&oldid=643827" இலிருந்து மீள்விக்கப்பட்டது