பக்கம்:வழிகாட்டி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வழிகாட்டி

என்று அதைக் குறிப்பர். மெய்ப்பொருளை யார் அறிந் தனரோ அவரே மெய்யான புகழைச் சொல்வார்கள். மெய்ப் பொருள் உணர்ந்தவர்கள் தம்முடைய சொற் களாலே, இவன்தான் எல்லா செயல்களுக்கும் உண்மை யான கர்த்தன் என்றெண்ணி முருகனைப் புகழ்கிறார் கள். 'பெருமை பெறு நினதுடிகழ் பேசவேண்டும் பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்" என்று இராம லிங்க வள்ளலார் முருகனை வேண்டுகின்றார். அவன் புகழல்லாதன பொய்ப்புகழென்பது அவர் குறிப்பு. முருகன் திருவருளில் ஊறிய அருணகிரிநாதர் தாம் இயற்றிய சந்தப் பாடல்களுக்குத் திருப்புகழ் என்ற பெயரை முருகன் ஆணைப்படியே சூட்டினார். குறளிற் சிறந்ததற்குத் திருக்குறளென்று பெயர் அமைந்தது போல, புகழிற் சிறந்ததற்குத் திருப்புகழ் என்ற பெயர் அமைந்தது.

ஆதலின் மெய்யை அறிந்தவர்கள் புகழ்கின்ற சொற்களெல்லாம் கூடும் இடமாக முருகன் இருக்கி றான். அந்தச் சொற்களின் தொகுதியாகவே அவன் விளங்குகிறான்.

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை!

(அந்தணர்களுடைய செல்வமாக இருப்பவனே! மெய்யை உணர்ந்தவர்களுடைய சொற்களெல்லாம் தொக்க தொகுதியாக விளங்குபவனே)

காதல் வீரன்

காதலும் வீரமும் உலக வாழ்வுக்கு இன்றியமை யாதன; அன்பைப் பெருக்கவும், வன்பைச் சுருக்கவும் இவ்விரண்டும் உதவுகின்றன. ஆக்குவதும் அழிப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/162&oldid=643830" இலிருந்து மீள்விக்கப்பட்டது