பக்கம்:வழிகாட்டி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 177

பரிசிலுக்காக வந்தவன். அந்தப் பரிசிலை உலகத்தி லுள்ள வள்ளல் யாரிடத்தும் பெறமுடியாது. பெறலரும் பரிசில் அது. அதனை ஒருவன் பெற்றுவிட்டால் அவனினும் சிறந்த பதவி பெற்றவர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அகில லோகத்திலும் தேடினாலும் கல்வி யாலோ புகழாலோ செல்வத்தாலோ தலைமை பெற்ற வர்களாக இருப்பவர்களையே காணலாம். இந்த இரவ லன் வேண்டுவதோ அவர்களுக்குக் கிடைக்காத பரிசில். அந்தப் பரிசிலைப் பெற்றால் உலகத்தில் அவனுக்குச் சமானம் அவன்தான். அந்தப் பரிசில் எது? அதுதான் முத்தியின்பம்.

முருகன் முத்திச் செல்வத்துக்கு உரிமையாளனாக இருக்கிறான்; அதனை விரும்பி வருபவர்களுக்கு வழங்கி இன்புறும் தாதாவாக இருக்கிறான். ஆகையால் அவன் பெறலரும் பரிசிலைத் தருவானென்று நக்கீரர் சொல்கிறார்.

இருண்ட நிறத்தையுடைய கடல்சூழ்ந்த உலகத் திலே நீ ஒருவனே யாரினம் மேம்பட்டுத் தோன்றும் படியாக, எல்லாவற்றிலும் சிறந்ததென்று போற்றப்படு வதும் பெறுவதற்கு அரியதுமாகிய வீடுபேறென்னும் பரிசிலை என்றும் அழிவில்லாமல் அவன் அருள்வான்.

விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி. (என்றும் அழிவில்லாமல் இருக்கும்படியாக, இருண்ட கரிய நிறம் பெற்ற கடலால் சூழப்பட்ட உலகத்தில் நீ ஒருவனே தலைவனாகத் தோன்றும்படி,

வ.க.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/179&oldid=643888" இலிருந்து மீள்விக்கப்பட்டது