பக்கம்:வழிகாட்டி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 187

புலவன் பெறுதற்குரியது அதுதான். புலவன் வேண் டினாலும் வேண்டாவிட்டாலும், "வேண்டத் தக்க தறி வோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ " (திரு வாசகம்) என்றபடி, 'இவனுடைய தகுதி இன்னது, இவனுக்குரிய பரிசில் இதுதான்' என்று வரிசையறிந்து வழங்கும் பெருமான் ஆதலால், முருகன் புலவனுக்கு ஏற்றபடி ஜீவன் முத்தியை வழங்கு வான். இது அவனுடைய தலைமையான தெய்வத்தன்மையைக் காட்டுகிறது.

நான் அறிந்தபடி இது; அதனைக் கூறினேன். நீ அந்த உபகாரியிடுடம் சென்றால் பெறலரும் பரிசிலை நல்குவான்' என்ற முறையிலே சொல்லி நக்கீரர் இதை ஆற்றுப்படை என்னும் பிரபந்த அமைப்பிலே பொருத்தி யிருக்கிறார். ஆனாலும் முருகன் யாவர்க்கும் மேலாகிய பரப்பிரமம் என்பதையும், அவன் திருவடிவை அடை வதே புலமைக்கு இலக்கு என்பதையும், தலவழிபாடும் மக்கட் கூட்டத்தினர் அங்கங்கே அவனை வழிபடும் முறைகளும் கண்டு மகிழ்வதற்குரியன என்பதையும் குறிப்பித்திருக்கிறார்.

முருகன் அழகன், வீரன், கருணைக்கடல், பெரு வள்ளல், இணையற்ற தெய்வம் என்ற நினைவே முதலடி முதல் இறுதி அடி வரையில் உள்ளத்திலே எழும்படியாக அமைந்திருக்கிறது திருமுருகாற்றுப்

. سس (تكن أنس

நக்கீரர் நல்ல முறையில் வழிகாட்டியிருக்கிறார். முருகன் அருள்பெற வழிகாட்டும் இந்நூல் தமிழின் பத்துக்கும் வழிகாட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/189&oldid=643924" இலிருந்து மீள்விக்கப்பட்டது