பக்கம்:வழிகாட்டி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

வழிகாட்டி

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்; விண்செலல் மரவின் ஐயர்க்கு ஏந்தியது

ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; (ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது அங்குசம் கடாவ ஒருவகை, இருகை 110

ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப, ஒருகை மார்பொடு விளங்க, ஒருகை

தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ட, ஒருகை பாடின் படுமணி இரட்ட, ஒருகை 115

நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி, அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல 12O

உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பா றாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று;

3. திருவாவினன்குடி

சீரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர், மாசற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர், நன்பகல் 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/194&oldid=643943" இலிருந்து மீள்விக்கப்பட்டது