பக்கம்:வழிகாட்டி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

வழிகாட்டி

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் 165 பகலில் தோன்றும் இகலில் காட்சி நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர், மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர், வளியிடைத் 170 தீஎழுந் தன்ன திறலினர், தீப்பட உரும்இடித் தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கின்தம் பெறுமுறை கொண்மார், அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் 175 ஆவி னன்குடி அசைதலும் உரியன், அதாஅன்று;

4. திருவேரகம்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை i8O மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண். புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185 ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப் பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/196&oldid=643950" இலிருந்து மீள்விக்கப்பட்டது