பக்கம்:வழிகாட்டி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே, ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி, நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ

ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்குவில் தானைத் தலைவ

மாலைமார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள

197

245

250

255

280

235

27C

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/199&oldid=643963" இலிருந்து மீள்விக்கப்பட்டது