பக்கம்:வழிகாட்டி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள்

திருமுருகாற்றுப்படையைத் தமிழ் நாட்டார் பல காலமாகப் பாராயணம் செய்து வருகிறார்கள். பாட்டு முழுவதையும் மனனம் பண்ணி நாள்தோறும் ஒதி வருபவர்கள் பலர். இதனை ஒதியதனால் தம் கருத்து நிறைவேறப் பெற்றோரும், நோய்நீங்கப் பெற்றோரும் உண்டு. மந்திரத்தை ஜபிப்பதுபோல இதனை ஒதிவரும் வழக்கத்தோடு, இது முடிந்தவுடன் இதற்குப் பய னுரைக்கும் பாடல் வேண்டுமென்று யாரோ அன்பருக் குத் தோற்றியது. அவர் பயனைக் கூறும் கவிகளோடு முருகனுடைய துதியாகவும் சில செய்யுட்களைப் பாடினார். அவர் பாடியவை பத்து வெண்பாக்கள். பக்திச்சுவை செறிந்து எளிய நடையில் அவை அமைந் திருப்பதனால் திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்பவர்கள் யாவரும் முறையாக அவற்றை இறுதி யிலே சொல்லி வரலாயினர்.

இந்த வெண்பாக்களைப் பாடினவர் நக்கீரரே என்று, இவற்றுக்குப் பெருமையளிக்கும் பொருட்டுச் சிலர் கூறி வந்தனர். அதனை நம்பின புலவரும் உண்டு. திருமுருகாற்றுப்படையை நக்கீரர் பாடுவதற்குக் கதை எழுந்ததுபோல, பிற்காலத்தில் இந்தப் பாடல்களைப் பாடுவதற்குக் காரணமாகவும் ஒரு கதை தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/202&oldid=643974" இலிருந்து மீள்விக்கப்பட்டது