பக்கம்:வழிகாட்டி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் - 2O3

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரர்இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். கிரவுஞ்ச மலையை எறிந்து பொடிபடுத்தியதும், பகைவரது வலிமை குன்றும்படியாகப் போர் செய்த தும், சூரனால் துன்புற்ற அக்காலத்தில் தேவலோகத்தில் இருந்த தேவர்களின் துன்பத்தைப் போக்கியதும், இன்று என்னைக் கைவிடாமல் நின்றதும், நக்கீரர் முதலியவர்களை மலைக்குகையிலே பாதுகாத்ததும் சத்தியத்தை நீங்காமல் இருக்கும் வீரனாகிய முருகனது திருக்கரத்திலுள்ள வேலேயாகும். (2)

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை. வீரத்தையுடைய வேல்; நீளமான வேல்; தேவர் களைச் சிறையினின்றும் விடுவித்த தீரம் பொருந்திய வேல்; செவ்வேளின் திருக்கரத்திலுள்ள வேல்; சமுத் திர்த்திலே புகுந்து மூழ்கிய வேல்; வெற்றியைத் தரும் வேல்; சூரனுடைய மார்பையும் கிரவுஞ்ச மலையையும் துளைத்த வேல் எனக்குத் துணையாக உள்ளது. (3)

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். கொல்ைத் தொழிலிலே பயின்ற வேலையுடைய சூரனைச் சங்காரம் செய்த தலைவனே, முன்பு பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/205&oldid=643983" இலிருந்து மீள்விக்கப்பட்டது