பக்கம்:வழிகாட்டி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 25

ஒவ்வொரு ஊரிலும் தினையும் மலரும் கலந்து ஆட்டையறுத்து மக்கள் விழாக் கொண்டாடுகிறார்கள். அங்கே ஊர் காக்கும் தெய்வமாக விளங்குகிறான். பக்தர்கள் துதித்துப் புகழ்கிறார்கள். பெரியோர், 'பெரிய கடவுளே' என்று வாழ்த்துகிறார்கள். வேறு பலரும் புகழ்பாடுகிறார்கள். மனசிலே ஆறு முகத்தையும் தியானம் செய்கின்றனர் சில அன்பர். அவர்களுக்கும் அருள் செய் கிறான்.

அறுதொழிலும் முத்தீச் செல்வமும் இருபிறப்பும் உடைய அந்தணர் ஈர ஆடையோடு கைகளை உச்சியிற் கூப்பிக் கொண்டு சடrர மந்திரத்தை ஜபித்தும் வேத மந்திரத்தை ஒதியும் வழிபடுகிறார்கள். முனிவர் விரதம் இருந்து முருகனைத் தரிசிக்கிறார்கள். அவர்களுக்கும் அவன் திருவருள் புரிகிறான்.

அவனை அறம் கருதியும், பொருள் கருதியும், இன்பங் கருதியும், வீடு கருதியும் பல துறையிலும் ஈடு பட்ட மக்கள் வழிபடுகிறார்கள். பேய் மகள்கூடத் தனக்குப் பசியடங்க உணவு கிடைத்த நிறைவினால் அவனைப் பாடி வாழ்த்தித் துணங்கை ஆடுகிறாள்.

தேவசாதியினரில் அவனை வணங்காதார் யார்? அவனைப் பாடி மலைச்சாரற் சோலையிலே ஆடும் சூரர மகளிர் அவனுக்கு அடிமை செய்பவர்களே. கந்தரு வரும் அவர் மாதரும் தம்முடைய இனிய இசையினால் அவன் உள்ளத்துக்கு உவப்பை உண்டாக்குகிறார்கள். இந்திரனும் திருமாலும் சிவபிரானும் அவனிடம் தம் குறையைத் தீர்த்துக் கொள்ள வருகிறார்கள். முப்பத்து மூன்று தேவர்களும் பதினெண் கணத்தினரும் தமக்குரிய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள அவனை வழி படுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/27&oldid=643581" இலிருந்து மீள்விக்கப்பட்டது