பக்கம்:வழிகாட்டி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வழிகாட்டி

கியமான கருத்து அந்த ஊரிலுள்ள ஓர் உபகாரியின் புகழை வெளிப்படுத்துவதாக இருக்கும். அதனால் நூலைப் படிக்கும்போது பிரயாண நூல் என்று தோற்றாது. ஆனாலும் பிரயாண நூலினால் கிடைக்கும் இன்பத்தை அதனால் பெறலாம்.

இந்தப் பழைய பிரயாண நூல்களுக்கு ஆற்றுப் படை என்ற பெயர் வழங்கி வந்தார்கள். ஆற்றுப்படை என்ற தொடருக்கு வழி காட்டுதல் என்பது பொருள். ஆறு என்பது வழி. ஒருவனை இன்ன வழியே போ என்று வரிகாட்டுவதால் அத்தகைய நூல்களுக்கு ஆற்றுப்படை என்ற பெயர் வந்தது. ஒரிடத்துக்குப் போக வேண்டுமென்ற நோக்கத்தை உடையவனுக்கு மற் றொருவன் அந்த இடத்துக்குப் போகும் வழியையும், அவ்வழியிலுள்ள காட்சிகளையும், போகும் இடத்தின் விவரங்களையும் சொல்வான். போகிறவன் ஊரைப் பார்க்கப் போகிறவன் அல்லவே! அவ்வூரில் உள்ள உப காரி ஒருவனைப் பார்க்கப் போகிறான். ஆகையால் அந்த உபகாரியின் பெருமையையும் சேர்த்துச் சொல்வான். இவ்வாறு வழிகாட்டுகிறவன் முன்பே அந்த உபகாரி யினிடம் சென்றவனாக இருந்தால்தானே இவ்வளவு விவரங்களையும் சொல்ல முடியும்?

ஆற்றுப்படையின் இலக்கணம் தொல்காப்பியத் தில் இருக்கிறது. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் என்பவர்கள் வழியிடையே எதிர்ப்பட்ட தம் இனத் தாரை எந்த உபகாரியிடம் தாம் சென்று பரிசு பெற்றார் களோ அந்த உபகாரியிடம் போகும்படியாகச் சொல்லி வழி காட்டுவது என்பது அந்த இலக்கணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/38&oldid=643593" இலிருந்து மீள்விக்கப்பட்டது