பக்கம்:வழிகாட்டி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வழிகாட்டி


நவிற்சியாகாது. பழைய அருமையைப் புதிய எளிமை யாக்குந் திறன் அறிஞர் ஜகந்நாதனிடத்தில் அமைந்திருக் கிறது. இதை அவரது எழுத்திலும் பேச்சிலும் காணலாம்.


ஆற்றுப்படையை வழிகாட்டி' என்றவர் யார்? 'அறிமுகம்' என்று உள்ளுரையை உணர்த்தினவர் யார்? விளக்கங் கூறிக் கூறி உரை கண்டவர் யார்? இந் நூலைப்


Lissrā5.


திருமுருகாற்றுப்படைக்கு இத்தகைய எளிய உரை இதுகாறும் வெளிவரவில்லை. இப்பொழுது வெளிவந் துள்ள இந் நல்லுரையைத் தமிழ்நாடு பயன் படுத்துவதாக இவ்வாறு வழிகாட்டுந் தொண்டை மேலும் மேலும் ஜகந்நாதன் ஆற்ற முருகன் அருள் பாலிப்பானாக.


இந் நன்னூலைச் செவ்விய முறையில் வெளியிட்டு நாட்டுக்கு உதவிய அல்லயன்ஸ் கம்பெனியார்க்கு எனது நன்றியறிதல் உரியதாக.


17.1.1947 திரு.வி.க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/6&oldid=644028" இலிருந்து மீள்விக்கப்பட்டது