பக்கம்:வழிகாட்டி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - வழிகாட்டி

மூங்கில்கள் வளர்ந்த மலைச்சாரலுக்கு அவர்கள் வருகிறார்கள். இயல்பாகவே அழகு திரண்டு கிடக்கும் அவர்கள் திருமேனியில் அணிகளும் சிறந்து விளங்கு கின்றன. அழகுக் கோலங் கொள்ளும் கலையில் அவர் கள் பேராற்றல் படைத்தவர்கள் போலும் திருவடி முதல் திருமுடி வரையில் அழகு பொங்குகிறது. அதற்கு அணி செய்து விளங்குகின்றன. ஆபரணங்கள். அணியும் ஆடையும் மலரும் சிறந்த அலங்காரப் பொருள்கள். அவை அவர்களுடைய வண்ணமேனியில் பொருந்தி அழகிலுக்கு அழகு செய்கின்றன. எப்படி? நக்கீரர் சொல்வதைப் பார்க்கலாம்.

ஒள்ளிய சிவந்த சிறிய அடி படைத்தவர்கள் அந்த அரமகளிர். மென்மையும் விளக்கமும் சேர்ந்து ஒள்ளிதாக அமைந்த அடி; அந்த அடியைச் சுற்றி கிண்கிணி ஒலிக் கிறது. அந்தப் பாதங்களுக்கு மேலே திரண்ட கால்கள். அந்தக் கால்களுக்கு மேலே வளைந்து தளர்ந்து ஒசியும் இடை, பருத்த தோள்கள். அவர்கள் உடுத்துள்ளதுகில் செவ்வண்ணம் படைத்தது. அதற்குச் சாயம் தோய்த்தவர் யாரும் இல்லை. அந்த வண்ணம் எங்கே கிடைக்கும்? இயற்கையிலே செவ்வண்ணம் கொண்ட தோயாத் துகில் அது, வான் அரம்பையருக்குக் கற்பகமரம் வழங் கியது போலும் இந்திர கோபப் பூச்சிகன் நிறம் எப்படிச் செக்கக் செவேலென இருக்கிறதோ அப்படிக் கண்ணைப் பறிக்கிறது அந்தச் செந்நிறம். துகிலுக்கு அழகான கரை. பூ வேலை செய்த கரையும் உடலும் உடைய பூந்துகில் அது. இடையிலே மேகலையை அணிந்திருக்கிறார்கள். மேகலை பல வகைப்படும். அவர்கள் அதிக வடங் களையுடைய மேகலையை அணியவில்லை. நுடங்கும் இடை தாங்க வேண்டுமே! ஏழு வடம், எட்டு வடம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/62&oldid=643617" இலிருந்து மீள்விக்கப்பட்டது