பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 எஸ். நவராஜ் செல்லையா

கொண்டே இருப்பதைப் பார்த்து பலர் கேலி பேசத்தொடங் கினர்கள். எரிந்து கருகிப்போன என் கால்கள் பலம் அடை வதற்கு (Warm) நீண்ட நேரம் பிடிப்பதால்தான், இவ்வளவு பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது” என்று பதில் கூறிய கன்னிங்காம், அமெரிக்காவிலே சிறந்த ஒரு மைல் ஒட்டக்காரன்ை.

1936ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் பி ர தி நி தி யா க ஜெர்மனி சென்று 1500 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெறுகின்ற வாய்ப்பை மிக்கக் குறைந்த தூரத்தில் இழந்தாலும், இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வாங்கிய வீரனகி சரித்திரம் படைத்தான்.

'உடலில் குறையுள்ளவர்கள்தான், உலகில் அதிக சாதனை புரிகின்ருர்கள்’ என்று ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து, தன்னை உதாரணமாக்கிக் காட்டினன். குறையானது உடலிலே இருந்தாலும் உள்ளத்திலே நிறைவான எண்ணம் இருந்தால், உலகில் பல சாதனைகளை நிகழ்த்திட முடியும் என்று உலகுக்கு உணர்த்திய கன்னிங்காம், ஒலிம்பிக் சரித் திரத்தில் மட்டுமல்ல, உ ல க த் தி லு ம் சிறந்த வீரர்களுக் கிடையே உன்னத மனிதனுக விளங்குகிருன்.

குறிப்பு:- சோழன் கரிகாலன், தீக்காயத்தால் கால்கருகி அப்பெயரைப் பெற்ருன். பின்னர் பெருமைமிக்க அரசனுக அரசாண்டான் என்று தமிழக வரலாறு கூறுகிறது. கன்னிங் காமும் கால் கருகி சிறந்த வீரனாக மாறியதால் கலங்காத கரிகாலன் என்று இங்கே அழைக்கப்பட்டிருக்கிருன்.