பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் - 3 I

காரணம் என்னவென்ருல், ஒவன்ஸ் ஒடி முடித்த 100 கெஜ தூரத்தின் நேரம் உலக சாதனையை நெருங்கிக் கொண் டிருந்தது. அவரது ஆர்வம் ஆவேசமாக விரட்டவே,கடிகாரம் பிப்பேர் கடையை நோக்கி ஓடினர். கடைக்காரர் சொல்லிய சேதி, அவரை மேலும் வியப்புக் குள்ளாக்கி, அதிர்ச்சி படையச் செய்தது.

அதாவது கடிகாரம் சரியாகவே இருக்கிறது. பழுதடைய வில்லை என்பதே! இந்தச்சேதி எல்லோரிடையிலும் பரவி யது. இணையிலாத இளைஞன் ஒருவன் நம்மிடையே இருக் கின்ருன் என்ற இன்பத்தில், ஒவன்ஸை எல்லோரும் பாராட் டிர்ைகள். தைரியமூட்டினர்கள். வாடியபயிருக்கு வான்மழை கிடைத்தது போன்ற புகழ்ச்சி சூழ்நிலை, ஓவன்ஸ் வாழ்வில் அமைந்தது.

பள்ளியில் நடக்கும் போட்டிகளில் எல்லாம் முதல்வகை வந்தான். பிறகு கல்லூரியில், ஒகியோ பல்கலைக் கழகத்தில் நடந்த போட்டிகளில் எல்லாம் வெற்றி வீரனுகத் திகழ்ந் தான். அத்துடன் அல்லாமல், ஒல்லியாக,உபயோகமற்றவன் போல நடமாடிய சிறுவன், இப்பொழுது ஒகியோ பல்கலைக் கழகத்திற்கும் மாகாணத்திற்கும் பிரதிநிதியாகப் போட்டி களில் பங்கு பெறுபவனுகவும் மாறிவிட்டான். உழைப்பின் சின்னம் அல்லவா அவன்!

வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து வீரநடை போட் டாலும், ஒவன்ஸ் வாழ்க்கையில் வறுமை விடாமல் விரட்டிக் கொண்டு தான் இருந்தது. கல்லூரி படிப்புக்கு அதாவது மேல் படிப்புக்கு எந்த விதமான உபகாரச் சம்பளமோ அல்லது ஆதரவோ கிடைக்காத நிலையிலும், கல்லூரிப் படிப் பைத் தொடர்ந்தான் அந்த இளைஞன். அதாவது வேலை செய்து கொண்டே படிப்பைத் தொடர்வது தான். எவ்வளவுதான் விளையாட்டுக்களில் ஈடுபட்டு சிறப்புற விளங் கிலுைம் படிப்பை விடாமல் கெட்டிக்காரகைத் திகழ வேண்டும். என்று அவனது பயிற்சியாளர் லாரிஸ்னிடர்