பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எஸ். நவராஜ் செல்லையா

சரியாக அழுத்திப் பிடித்துக்கொண்டது. நிமிரவும் முடிய வில்லை, குனியவும் முடியவில்லை. H

ஆன் ஆர்பர் எனும் இடத்தில் நடக்கின்ற போட்டியில் வெற்றி பெற்ருல் மிகவும் சிறப்புடையதாகும் என்ற தன் விருப்பத்திற்குத் தடை போடுவதுபோல உடல் நிலை அமைந்துவிட்டது. ஒரு வாரம்தான் இருக்கிறது. இடையில் எப்படியும் அதில் கலந்துகொண்டாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஒவன்சிடம் ஓயாமல் உரைத்துக் கொண்டேயிருந்தது! ஆசை இருந்தால் மட்டும்போதுமா? அதற்கு உடல் இடந்தர வேண்டாமா?

ஒவன்ஸ் பயிற்சியாளர் முதலுதவி முறைகளைச் செய்து வைத்தார். இயந்திரங்களின் உதவியால், வெப்பக்கதிர்களேப் பாய்ச்சி, வலியைப் போக்கிட முனைந்தார். மருத்துவர் செய்த முயற்சி பலனளிப்பதுபோல் தோன்றிலுைம் முற்றிலும் வலியை குணமாக்கிட முடியவில்லை. முதுகில், வலி இருந்தது. நிமிர்ந்து நிற்கவும், குனியவும் முடியவில்லை. என்ற நிலைமையில் சிறிதும் மாற்றமில்லாமல், நேரம் கழிந்து கொண்டிருந்தது.

எப்படியோ, போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தாகி விட்டது. ஒவன்ஸ் நிலையைக் கண்ட பயிற்சியாளர் அருகில் சென்ருர். உன்னுல் 220 கெஜ தூரத்தைக்கூட ஒடிமுடிக்க இயலாத நிலையில் இருப்பதால் இந்தப் போட்டியிலிருந்து நீ விலகிக் கொள்கிருய் என்று அறிவித்து விடுகிறேன் என்று கூறினர். ஒவன்சோ பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டவாறு நான் இந்தப் போட்டிகளில் கலந்து கொள் ளத்தான் போகிறேன், என்று திட்டவட்டமாகக் கூறிவிட் டான்.

1935ம் ஆண்டு, மே மாதம் 25ந்தேதி மிகிசான் எனும் மாகாணத்தில், ஆன் ஆர்பர் எனும் இடத்திலேதான் இந்த உரையாடல், பயிற்சியாளருக்கும் ஒவன்சுக்கும்