பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எஸ். நவராஜ் செல்லையா

செய்வது என்று புரியவில்லை. தைரியம் சொல்லலாம் என்று ஒவன்சிடம் கூறவந்த பொழுது, ஒவன்சே அவரிடம் சென்று, இங்கு என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள் என்று அவருக்கு தைரியம் கூறிவிட்டுத் தன் கடமையிலே கண்ணுங் கருத்துமாக இருந்துவிட்டான்.

இரண்டு வாய்ப்புக்களையும் இழந்து மூன்ரும் வாய்ப்பு சரியாக நடந்து, குறித்து வைத்திருக்கும் எல்லையாகிய தூரத்தைத் தாண்டிக்கடந்தால்தான், பிறகு அந்தப்போட்டி யிலே கலந்து கொள்ள முடியும். இங்கே மீதி இருப்பது ஒரே வாய்ப்புத்தான். அதிலே தவறு இல்லாமலும், தகுதிபெறவும் தாண்டியாகவேண்டும். கொஞ்சங் கூட குழம்பிப் போகாமல், கவலை கொள்ளாமல், மன உறுதியை இழக்காமல், தைரியத் துடன் ஒவன்ஸ் தன் வாய்ப்புக்காகக் காத்திருந்தான்! உலக சாதனை நிகழ்த்திய வீரனின் உத்வேகம் நிறைந்த தாண்ட லுக்காக, உலகமே அப்பொழுது காத்திருந்தது.

இட்லர் ஆண்ட ஜெர்மனி நகரத்தில் வாழ்ந்த ஆரிய இனத்தின் வாரிசாக, ஒலிம்பிக் பந்தயத்தில் நீளத்தாண்டும் போட்டியில் கலந்துகொள்ள ஒரு வீரன் வந்திருந்தான். அவன் பெயர் லட்ஸ் லாங் (Lutz Long) என்பதாகும். நீக்ரோ இனம் தாழ்ந்த இனம் என்று அவனது சர்வாதிகாரி ஆணவத்துடன் கூறிலுைம், லட்ஸ் லாங் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இ ல்லை.

சாதி, மதம், இனம், குலம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி, அனைவரும் சமம் என்று ஏற்றுக்கொள்கின்ற சமுதாய மறுமலர்ச்சிப் பூங்காவாக அல்லவா விளையாட்டுத் துறை விளங்குகிறது. அந்த சமரசப் பூங்காவில் பூத்த நறுமலராக விளங்குகிருன் லட்ஸ் லாங். உலகம் போற்றும் உன்னத வீரன் ஜெசி ஒவன்ஸ் இரண்டு முறை தனது தாண்டும் முயற்சியில் தவறிப்போன நிலையைக் கண்டு தத் தளித்துப் போனன். மனம் கலங்கிப் போனன்.