பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 எஸ். நவராஜ் செல்லையா

தனது பள்ளிச்செலவுக்காக 'ఎ" பாலிஷ் போட்டு பணம் சம்பாதித்தான் என்ற வாழ்க்கைக் குறிப்புடன் அவ னது வரலாற்றைப் படிக்கும் பொழுது, பஞ்சத்திலும், பசியா லும் அடிபட்டுப் பரிதவித்த அவன் பிற்காலம், உன்னதமான உற்சாகம் நிறைந்த உழைப்பினல் எப்படி பிரகாசம் பெற் றது, பேரும் புகழும் உற்றது என்ற உண்மையை நிதர்சன மாகப் பார்க்கிருேம் அல்லவா!

இத்தகையவரலாற்று நாயகனை மாவீரன் பெயர் பாப் ஹேய்ஸ் (Bob Hayes) என்பதாகும். அமெரிக்க நீக்ரோ இனத்தின் வாரிசுதான் இவனும். இவனுக்கு ஒரு அண்ணன். பெயர் ஏர்னஸ்ட் (Arnest). இந்த ஏர்னஸ்டுக்கு ஒர் ஆசை. அதாவது, தான் குத்துச் சண்டையில் உலக மாவீரனாக வர வேண்டும் என்பது. ஏர்னஸ்ட் ஆசைப்பட்ட பொழுது, சிலர் தந்த அறிவுரையானது, ஒடிப் பழகு" என்பதுதான் ஒடிப் பழக பழக நெஞ்சுரம் (stamina) அதிகமாகும் என்று அறிந்த ஏர்னஸ்ட், தனியாக ஒடிட சஞ்சலப்பட்டான். கூட யாராவது ஒடி வந்தால், அதிக நேரம், அதிக தூரம் ஒடலாம் என்று எண்ணம். உண்ணுவதற்கென்ருல் துணைவருவார்கள், ஒடுவதற்கு யார் வருவார் இந்தக்காலத்தில்!

அண்ணன் கண்ணிலே அகப்பட்டுக் கொண்டான் பாப். 'நீ என்னுடன் கூட தினமும் காலையிலே ஒடி வரவேண்டும்’ என்று முதலில் செல்லமாக அழைத்தான். பாப்தான் சோம்பேறிப் பையனுயிற்றே. ஒடுவதை வேப்பங்காயாக நினைத்தான். முடியாது என்று மறுத்தான். அன்புக்குரலாகப் பிறந்த அவனது அழைப்பு,கொஞ்சம் கரடுமுரடாக மாறியது. அதற்கும் மசியாத தம்பிக்கு அடுத்தக் கட்டம் வந்தது.

'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்' என்ற பழமொழியை நிஜ வாழ்க்கையில் பிர யோகம் பண்ணத் தொடங்கிவிட்டான் அண்ணன். அவ னுக்கு ஆசை குத்துச் சண்டை வீரகை அல்லவா வர வேண் டும்! வேறு யாரையாவது அடித்தால், அவனும் அல்லவா எதிர்த்துத் தாக்க ஆரம்பித்து விடுவான் என்ற