பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் § {}

புரூமல் தோல்வியைக் கண்டு தளரவில்ஃப். தலைகுனியவில்லை. மாருக, துணிவை வளர்த்துக் கொண்டான். போட்டியில் அஞ்சா நெஞ்சத்தை அவன் மிகுத்துக் கொண்டான்.

நீளத்தாண்டும் போட்டியில் கலந்து கொள்ள விரும்பிய புரூமல், தாண்டும் வீரர்களின் ஆற்றலைப் பார்த்து, விலகி வந்து, உயரத்தாண்டும் போட்டியில் பயிற்சி பெற விரும்பி ஞன். தொடக்கமே 4 அடி 9 அங்குலம் என்றதால், பயிற்சி யாளராலே தவிர்க்கப்பட்டும், அவன் தன்னுடைய துணிவி ல்ை, உழைப்பைத் தொடர்ந்தான். 18 வயதுக்குள்ளாக 7 அடி உயரம் தாண்டினன். 20ம் வயதில் 7 அடி 5 அங்குலம் தாண்டினுன் என்ரு ல் அவனது உழைப் ைபயும் உற்சாகப் பாங்கினையும் தான் நாம் காணவேண்டும். 6 அடி உயரமுள்ள புரூமல் 7 அடி 58 அங்குலம் தாண்டினன் என்ருல், அவன் தொட்ட காரியத்தைத் தொடர்ந்து பழகிஞன், துணிந்து திறம் பெற்ருன், பெற்ற திறத்தைப்பெருமை தரும் வழியில் ஈடுபடுத்தின்ை, பெரும் புகழ் பெற்ருன் என்பதே பொருளாகும்.

திறமிருந்தும், துணிச்சலும் தைரியமும் கு ைற ந் த தாமஸ், வெற்றி வாய்ப்பை இழந்தான். உள்ள திறத்தை உற்ற நேரத்தில் பயன் படுத்தி, உலகப் புகழ் பெற்ருன் ருமல். திறமில்லாத தைரியமும், தைரியம் இ ல் ல ள த நிறமும் தோல்வியையே அடையும் என்பதற்கு அமெரிக்க வீரன் தாமசும், ரஷ்ய வீரன் புருமலும் நமக்கு நல்ல ாடுத்துக்காட்டாய் விளங்குகின்ருர்கள்.

ஆகவே, திறத்தை வளர்ப்போம், தேவையான தைரி :த்தை நிறைப்போம். அதனை தூய வழியில், நேரிய செயலில் பயன்படுத்தி, புகழ் பெறுவோம். பி ந் த த ன் பயன் புகழார்ந்த, நல மார்ந்த வாழ்வு வாழத்தானே !