பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாய வழிகாட்டிய வீரர்களைப் போற்றுவோம். அவர்தம் அரிய பாதையில் நடைபோடுவோம். புகழ் சூடுவோம், என்று இளைஞர்கள் படைகிளம்பி விட்டால்,

தமிழகம் தரணியில் தலையாய இடத்திலல்லவோ திகழும்!

எனது கனவு நனவாக, என் நூல்களைப் படைத்து விடுகிறேன். கனவு நனவாகும் காலம் விரைவில்வர இருக்கிறது. அப்பொற்காலத்தை மனக் கண்ணுல் கண்டு மகிழ்கிறேன்.

இந்நூல், எனது அரிய முயற்சியின் விளைவாகத் தோன்றி, இன்று தமிழகத்தில் உலாவருகின்ற விளை யாட்டுக் களஞ்சியம் எனும் மாத இதழில், மாதந் தோறும் வெளிவந்த தலைப்புக் கட்டுரைகளின் அரிய தொகுப்பாகும்.

இந்நூல் வெளிவருவதற்கும் அருகிலிருந்து உதவிய திரு. சாக்ரட்டீசுக்கும், அச்சிட்டுத் தந்த திரு. பாண்டு

து அன்பு கலந்த நன்றி.

نیایی

ரங்கனுக்கும் என

எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழக நூலகங்களில் இடம் பெறும் வண்ணம் உதவி உற்சாகம் ஊட்டிவரும் தமிழகப் பொது நூலகத்துறை இயக்குநர் திரு. வே.

இ.

தில்லைநாயகம் அவர்களுக்கும், எனது மனங் கனிந்த

நன்றியை தெரிவித்துக் கெ ாள்கிறேன்.

விளையாட்டுத் துறை தமிழ் இலக்கியமாக நிறைய தமிழ் நூல்கள் வரவேண்டும் என்று எழுதி வரும் என் முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனேவருக்கும், என் அன்பு வணக்கத்தைப் படைக்கிறேன்.

1 — I — I 980 ஞான மலர் இல்லம்

சென்னை-17 எஸ். நவராஜ் செல்லையா