பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வரலாறு வணங்குகிறது!

தந்தை செய்தித்தாளே எடுத்துப் படிக்கத் தொடங்கிய வுடனே, பக்கத்திலே வந்து அமர்ந்து கொள்வாள் அந்தச் சிறுமி. 1928-ம் ஆண்டு அது. ஒலிம்பிக் பந்தயங்கள் ஆம்ஸ்டர்டாம் என்ற நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளை தன் தந்தைப் படித்துக் காட்டும் பொழுது, உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொள்வாள்.

‘நானும் ஒருநாள் ஒலிம்பிக் பந்தயத்திற்கு செல்லப் போகிறேன். எல்லாப் போட்டிகளிலும் வென்று வரப் போகிறேன். எனது நாட்டுக்கு நல்ல புகழ் சேர்த்து தருவேன்’ என்றெல்லாம் உணர்ச்சிமிகுதியால் பேசத் தொடங்கிவிடு வாள். அவளது தந்தைக்கோ மிக ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி வந்தது என்று தெரியாமல் திகைப்பார் அவர்.

ஆறு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஆருவது குழந் தையாகப் பிறந்த அந்த சிறுமி, 14 வயதும் நிரம்பாதவளாக இருந்தாள். 'உன் ஆசைக் கனவுகள் நிறைவேற வேண்டு மால்ை, நீ இன்னும் நான்காண்டுகள் பொறுமையாகக் காத் திருக்க வேண்டும். ஏன் தெரியுமா ? அப்பொழுதுதான் ஒலிம்பிக் பந்தயங்கள் மீண்டும் நடைபெறும் என்று அவள் தந்தை சொன்ன மொழிகள் அவள் காதுகளில் அடிக்கடி ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

ഖ്-5