பக்கம்:வழிப்போக்கன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

“என்னடி அங்கே, அம்மாவும் பிள்ளையும் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் கங்காதரய்யர் அச்சமயத்தில்.

“மேலே படிக்க வேண்டுமாம், அவனுக்கு. அவனை அழைத்துக் கொண்டு போய் ஆற்காட்டுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்களேன்!” என்றாள் தாய்.

“கழுதைக்குப் படிப்பில் அவ்வளவு அக்கறை வந்து விட்ட தாமா? ஆற்காட்டில் போய்க் கரிக்கோலம் போடுவான் அவன்!” என்றார் அவர்.

“படிக்கிறேன் என்று அவனாக விரும்பிக் கேட்கும்போது படிக்க வைத்துத்தான் பாருங்களேன்?”

“ஆற்காட்டில் இவனை யார் வைத்துப் படிப்புச் சொல்லிக் கொடுப்பார்கள்?”

“ஏன், நெல் மண்டி நடேச சர்மாவிடம்தான் கொண்டு போய் விடவேண்டும். ஆயிரம் பேருக்கு ஆயிரம் உதவி செய்கிறார் அவர். உங்களுக்குத்தானா மாட்டேன் எனப் போகிறார்?”

“ஒகோ! எல்லாம் திட்டம் போட்டு வைத்திருக்கிறாயா? சர்மாவேகூட இதைப்பற்றி என்னிடம் ஒரு முறை கேட்டார். நம் குடும்பத்தில் உண்மையான அன்பும் பற்றுதலும்கொண்டவர் அவர். நம் பெண் கலியாணத்தின்போது அவரிடம் கடன் வாங்கச் சென்றபோது அவர் என்ன சொன்னர், தெரியுமா? ‘அவ்வளவு பணம் எதற்கு? இன்றைக்கு வாணவேடிக்கைப் பார்க்க வருகிறவர்களெல்லாம் நாளைக்கு நீ சறுக்கும் போதும் வேடிக்கை பார்ப்பவர்கள்தான். பணத்தை விரயமாக்காதே!’ என்று புத்திமதி கூறினர். நான்தான் அவருடைய பேச்சைக் கேட்காமல் ஐயாயிரம் கடன் வாங்கிக் கலியாணத்தை நடத்தினேன். ஐந்து வருஷத்துக்கெல்லாம் அதற்கு வட்டி மட்டும் இரண்டாயிரம் ஆகிவிட்டது. நிலத்தை விற்று வட்டியும் முதலுமாக ஏழாயிரம் எடுத்துக்கொண்டு போனேன். சர்மா அப்போது என்ன சொன்னார், தெரியுமா? ‘அன்றே சொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/14&oldid=1304917" இலிருந்து மீள்விக்கப்பட்டது