பக்கம்:வழிப்போக்கன்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


தான் எழுதிக்கொண்டிருந்த சித்திரத்தைச் சட்டென எடுத்து மறைத்துவிட்டுப் படிப்பதில் தீவிரமாக ஈடுபட்டான். முல்லையின் மணம் வெகு அருகில் நெருங்கிவிட்ட போதுங் கூட அவன் தலை நிமிராமல் அத்தாழம்பூ மேனியாளின் தந்தக் கைகளை ஒருமுறை கீழ்க் கண்களாலேயே கவனித்துக் கொண்டான். பூனைபோல் நடந்துவந்த சகுந்தலா தன் தலை யிலிருந்த முல்லை அரும்புகளில் ஒன்றை எடுத்துச் சுந்தரத்தின் பின் கழுத்தில் சீண்டி விளையாடினுள். -

“சட், பூச்சி!” என்று திரும்பிப் பாராமலேயே பின் கழுத்தைத் தட்டினன் அவன்.

"பூச்சி இல்லே, வண்டு!" என்றாள் சகுந்தலா.

திரும்பிப் பார்த்த சுந்தரம். “முல்லை மொட்டு!” என்றான்.

“இல்லே, தாமரைப் பூ!” என்றாள் அவள்.

“நான் எழுதிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்து விட்டாயா? நீ ஏன் இங்கே வந்தே?”

“வரக்கூடாதா? அப்படித்தான் வருவேன்! நீ சரியாகப் படிக்கிறாயா? என்று பார்க்கத்தான் வந்தேன்; படமா வரைந்து கொண்டிருக்கிறாய்? இரு, இரு தாத்தாகிட்டே சொல்றேன்!”

சுந்தரம் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டான்.

“என்னவாம்” என்றாள் அவள்.

“தாத்தாவிடம் சொல்லாம இருந்தால்......”

“சொல்லாம இருந்தால்......?”

“உனக்கொன்னு கொடுப்பேன்!”

“என்ன கொடுப்பே. .....?”

“உன் எம்ப்ராய்டரியிலே படம்போட்டுக் கொடுப்பேன்!”

“படமா?...ம்...என்ன படம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/21&oldid=1315921" இலிருந்து மீள்விக்கப்பட்டது