பக்கம்:வழிப்போக்கன்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வைத்துவிட்டு வந்துவிட்டேன்? இனி திரும்பிப் போனலும் அது கிடைப்பது நிச்சயமில்லையே! குழந்தைக்கு வெள்ளி அரைஞாண் செய்துபோடவேண்டும் என்று வைத்திருந்த பதினைந்து ரூபாயைச் சாப்பாட்டு டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்என்று அவள் என்னிடம் கொடுத்தனுப்பினாள். எனக்கு அது கிட்டவில்லை. என்னைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் யாருக்கேனும் அது போய்ச் சேரவேண்டும் போலிருக்கிறது. அதனலேயே நான் அதை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். பாவம், யாருக்காவது அது உபயோகப்படட்டும். தகுதியுள்ள ஓர் ஆசாமியிடம் பிள்ளையார் அதைச் சேர்த்து விடுவார். ஆனால், இப்போது நான் சென்னைக்குப் போய்ச் சேர ரெயிலுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமே! பணத்துக்கு என்ன செய்வது? ஒரு வழியும் புரியவில்லையே!” என்று தவித்துக் கொண்டிருந்தான் வழிப்போக்கன் சுந்தரம்.

அப்போது சற்றுத் தூரத்தில் இருந்த மைதானத்தில் இருந்து ஒலி பெருக்கியின் மூலம் வந்துகொண்டிருந்த ஒரு பிரசங்கியின் கணிரென்ற குரல் சுந்தரத்தின் செவிகளில் தேனுகப் பாய்ந்தது. ஆம்; அது அவனுடைய நண்பனின் குரல் தான்!

வழிப்போக்கன் சுந்தரம் முகம் மலர, அகம் குளிர, குரல் வந்த அந்தத் திக்கை நோக்கி நம்பிக்கையுடன் நடந்தான்.

யிற்று; அப்படியும் இப்படியும் ஒரு மாதம் ஒடியே போய்விட்டது. கையிலுள்ள பணம் இன்னும் ஒரு வேளைக்குத் தான் காணும். அப்புறம்? பட்டணத்து நடைபாதையில் தவிக்கும் எத்தனையோ அனாதைகளைப்போல் தானும் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வந்துவிடுமோ? சுந்தரம் கண்களில் நீர் சுரந்துவிட்டது.

இந்த ஒரு மாத காலமாக அவன் சென்னையில் அலையாத இடமே இல்லை. போர்டு எழுதிப் பிழைத்துவிடலாம் என்று நம்பிக்கொண்டு வந்த அவனுக்கு நேர்மாறான அனுபவமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/50&oldid=1309668" இலிருந்து மீள்விக்கப்பட்டது