பக்கம்:வழிப்போக்கன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

மாசம் வாடகை அட்வான்ஸ் கொடுக்கணும். இந்தச் சமயம் நீங்க மொத்தமாகக் கொடுப்பதாய்ச் சொன்ன பணத்தைக் கொடுத்தீங்கன்னா ரொம்ப உதவியாயிருக்கும்."

"எக்சிபிஷன் நடத்தினதிலே என் கைவிட்டு எளுபது என்பேது ரூபா போச்சு. அதனாலே எனக்கு ஒரு லாபமும் இல்லே. புகளெல்லாம் உங்களுக்குத்தான். அதிலே எனக்கு மகிள்ச்சிதான்!” என்றான் சோமு.

"எனக்குக் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியையாவது கொடுங்களேன்?”

"வியாளக்கிளமை ஆவட்டும், ஏதாச்சும் பார்க்கலாம்” என்றான் சோமு.

கல்லில் நார் உரிப்பதைக் காட்டிலும் கடினமான காரியம் ஒன்று உண்டென்றால் அது மலேயா சோமசுந்தரத்தினிடம் பணம் வாங்குவதுதான்.

'வியாளக்கிளமை'கள் நாலைந்து வந்து போயின. சுந்தரமும் பணம் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். சோமு மட்டும் 'விளாக்கிளமை', சுந்தரம் இரண்டு பேருக்குமே 'டிமிக்கி' கொடுத்துக் கேட்டபோது, நூறு ரூபாய் கைக்கு வந்தது. அதை வாங்குவதற்குள் சுந்தரத்தின் பாடு பெரும் பாடாகிவிட்டது!

மறுதினமே வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, காமுவைப் புறப்பட்டு வரும்படி கிராமத்துக்குக் கடிதமும் எழுதிவிட்டான்.

அடுத்த வாரமே கைக்குழந்தையோடு தன் அப்பாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள் காமு. சுந்தரத்தின் மாமனார் ஒரு வாரகாலம் பட்டணத்தில் தங்கிப் புதுக்குடித்தனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து ஒழுங்குபடுத்திய பிறகே கிராமத்திற்குத் திரும்பிப் போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/81&oldid=1305150" இலிருந்து மீள்விக்கப்பட்டது