பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 97 ஆசிரியர்கள் இந்த அமைச்சரவையிலே இடம் பெற்றார்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று கருதுகிறேன். இதுவரை யாரும் அந்தக் கணக்கைப் போட் டுப் பார்த்து, அதற்காக ஒரு பாராட்டுக்கூட நீங்கள் சொல்லாத காரணத்தால் (பலத்த சிரிப்பு) உங்களுடைய கவனத்திற்கேகூட இது வரவில்லை என்று நான் கருதுகிறேன். ஆசிரியர் சமுதாயத்தை நம்பித்தான் நாடு இருக்கின்றது. சமுதாயம் இருக்கின்றது. ஏன் ஒரு நாட்டினுடைய எதிர்காலமே இருக்கின்றது. அதனால்தான் ஆசிரியர்கள் மனம் வேதனைப்படா மல் அவர்கள் விரும்புகின்றவற்றை ஏற்றுக்கொண்டு செய்கின்ற அரசாக ஒரு அரசு இருக்க வேண்டுமென்ற வகையில் இந்த அரசு நடைபோட்டு வருவதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக உணர்வீர் கள். இப்பொழுது கூட சில இடங்களிலிருந்து சில குரல்கள் வந்தது - உங்களுக்குத் தெரியும். நீங்கள் கூட அதைப்பற்றி கொஞ்சம் அச்சத்தோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குப் புரியும். ரு ஊராட்சி மன்றங்களுக்கு, ஒன்றியங்களுக்கெல்லாம் நிரம்ப அதிகாரங்களைத் தர வேண்டுமென்பதற்காக - அதைப்பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. சில ஆசிரியப் பெருமக்கள், சில ஆசிரியச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடிதம் மூலமாகவும், நேரிலும் என்னோடு தொடர்பு கொண்டு - என்ன, மீண்டும் எங்களையெல்லாம் ஒன்றியத்திலே கொண்டு போய் இணைத்து விடுவீர்களா என்றெல்லாம் கேட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். ஆனால், உங்களை ஊராட்சி ஒன்றியத்தோடு ணைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண் டிருப்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் நான் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். என்ன திருத்தம் வந்தாலும் - என்ன அதிகார மாற்றங்கள். ஊராட்சி ஒன்றியத்திற் கும், ஊராட்சி மன்றத்திற்கும் அல்லது மாவட்ட ஊராட்சிக்கும் புதிதாக அமையவிருக்கின்ற குழுவினால் வந்தாலும்கூட நீங்கள்