பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வழி மேல் விழி வைத்து... ஏற்கெனவே பெற்ற உரிமையை நிச்சயமாக இழக்க மாட்டீர்கள் என்பதை மிக உறுதியாக உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். களாக மாணவர் சமுதாயத்தை எதிர்காலத்தின் புரட்சி மலர்களாக, புதிய மணமிக்க மலர்களாக, இந்த நாட்டைக் காக்கும் காவலர் பொறுப்புள்ளவர்களாக ஆக்க வேண்டிய பெரும் கட மையை ஏற்றிருக்கின்ற உங்களுக்கு - எனக்கு முன்னால் இங்கே பேசிய அமைச்சர் பெருமக்களும், கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களும் எடுத்துக் காட்டியதைப் போல, எல்லாவிதமான உதவிகளையும், உரிமைகளையும், நன்மைகளையும் தயங்காமல், தட்டாமல் இந்த அரசு நிறைவேற்றி வந்திருக்கின்றது - sar குறிப்பாக அரசு அலுவலர்களோடு இணைந்துள்ள ஆசிரி யர் சமுதாயத்தை அரசு அலுவலர்களுக்கு என்னென்ன உரிமைகள், வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதோ, அதிலே எள்ளள வும் வேறுபாடில்லாமல் உங்களுக்கும் அளிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அந்தக் கருத்திலே என்றைக்கும் மாற்றம் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்கி றேன். வரவிருக்கின்ற மத்திய அரசின் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வருகின்ற நேரத்திலே கூட, அதற்கேற்ப மாநில அரசு செயல்படுகின்ற நேரத்திலே கூட ஆசிரியப் பெரு மக்களை நாங்கள் மறந்து விடமாட்டோம். ல 14இந்தியாவில் கல்வி கற்றோருடைய மொத்த விழுக்காடு 52.11; அதில் தமிழகத்திலே கல்வி கற்றோருடைய விழுக்காடு 63.72 விழுக்காடாகும். இது மன நிறைவைத் தரக்கூடியதல்ல. இது தோற்றத்திலே மகிழ்ச்சி தந்தாலும்கூட முழுமையான மன நிறை வைத் தரக் கூடியதல்ல. ஏனென்றால் இதைப்பற்றி கணிக்கின்றவர் கள் - பெருகிக் கொண்டு போகின்ற மக்கள் பெருக்கத்தை எண்ணிப் பார்த்து, அதைக் கணக்கிலே எடுத்துக்கொண்டு பார்க்கும்போது இரண்டாயிரமாவது ஆண்டில் இந்தக் கணக்கு மாறி, இந்த விழுக்காடு தமிழகத்திலே ஐம்பது சதவிகிதமாக ஆகக் கூடும் என்ற