பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வழி மேல் விழி வைத்து... ஒன்றை தம்பிக்குக் கூறிக் கொள்வேன். அவர் கட்டளை என்ற பெயரால் ஒரு கவிதையை இயற்றியிருக்கிறார். அவருக்கு கட்டளையிடுகின்ற வயது எனக்குண்டு. உரிமையும் எனக்குண்டு. எனவே நான் தம்பியைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முன்னுரையே ஏறத்தாழ பத்து அல்லது பதினோரு பக்கங்கள் கொண்ட முன்னுரை - ஒரு பெரிய புத்தகமாக வைரமுத்துவால் வரையப்பட்டு, அதனுடைய வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். (கைதட்டல்) ஏனென்றால் திருக்குறள் போல இதிலே தமிழகத்தின் வரலாறும், அந்த வரலாற்றிலே தமிழ் மொழி எப்படியெல்லாம் தப்பித்து பிழைத்தது என்பதும் எந்தெந்த புலவர்கள் எந்தெந்த காலக் கட்டத்தில் தமிழை வாழ வைத்தார்கள் என்பதும், வாழ வைக்க முற்பட்டார்கள் என்பதும் இந்த முன்னுரையிலே வைரமுத்துவால் கூறப்பட்டுள்ளது. இதை நானூறு அல்லது ஐநூறு பக்கப் புத்தகமாக வெளியிட்டால் என்றென்றைக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு தமிழ் மக்களுக்கு, எதிர்கால இளைஞர்களுக்கு, வரலாற்றுப் பேராசிரியர் களுக்கு உறுதுணையாக இது அமையும் என்ற காரணத்தால், இந்த முன்னுரை பெரிய அளவிலே விரிவுரையாக பெரிய நூலாக வெளிவரவேண்டுமென்று நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விழா குறித்த விளம்பரத்தில் "இலக்கிய பேச்சு - கலைஞர் ஆற்றுவார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இலக்கியம் என்பது என்னைப் பொறுத்தவரையில், அரசியல் வெப்பத்திற் கிடையே இளைப்பாறுகின்ற ஒரு நிழல், குளிர் தரும் நிழல் என்றாலுங்கூட - இலக்கியம் என்ற சொல்லைப் பற்றியே நாம் கொஞ்சம் ஆராயலாம். அதற்கு ஒரு சம்பவம் கூட உண்டு. ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத் தில் ஒரு மாநாடு நடைபெற்றது. முத்தமிழ் மாநாடு என்று அதற்குப் பெயர். அப்போது நான் சேலத்தில் திரைப்படத் துறையிலே பணி யாற்றிக் கொண்டிருந்தேன். மந்திரிகுமாரி படம் வெளிவருகின்ற