பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 115 "கூட்டல்" (+) அடையாளம். மனிதர்களை எல்லாம் ஒன்றாகக் கூட்டுகின்ற சின்னமாக அந்தச் சின்னம் அமைந்திருக்கின்றது (பலத்த கைதட்டல்) எனவேதான் ஒன்றோடொன்றை இணைக் கின்ற - ஒன்றோடொன்றை கூட்டுகின்ற - அந்தச் சின்னத்தின் மகிமையை உணர்ந்திருக்கின்ற ஒரு மதத்தை - ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற உங்களையெல்லாம் நான் பாராட்டுகிறேன். நீங்கள் எடுக்கின்ற விழாவிலே நானும் கலந்துகொள்கிற பேறு பெற்றமைக்காகப் பெருமையடைகிறேன். இங்கே வீற்றிருக் கின்ற பெரியவர்கள், இளைஞர்கள், அருமைத்தாய்மார்கள், சகோதரிகள் அனைவருடைய நல்ல எண்ணத்தையும் நான் பெற்று இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்றால் - நான் ஆற்ற வேண்டிய கடமைகளை முழுவதும் ஆற்றிவிட்டேன் என்கின்ற ஆணவத்தோடு இதை நான் உணரவில்லை. இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் பல இருக்கின்றன என்ற அடக்க உணர்ச்சியோடு, அப்படி ஆற்றுவதற்கான வலிமையை எனக்குத் தாருங்கள்; அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் வெள்ளி விழாவிலே கலந்து கொண்டிருக்கின்ற நீங்கள் அந்தத் திறனை எனக்குத் தாருங்கள்; அந்த ஆதரவை எனக்கு வழங்குங்கள். அப்படி வழங்குவீர்களேயானால் மேலும் மேலும் என்னு டைய காலம்வரையில் என் பணி உங்களுக்காக தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டேயிருக்கும் என்ற செய்தியை இந்த நல்ல விழாவிலே விடுத்து, அன்பான வரவேற்பிற்கும், பாராட்டுதல் களுக்கும், புகழுரைகளுக்கும் நான் ஏற்றவன்தானா என்பது கேள்விக்குறியாக இருந்தாலுங்கூட ஏற்றவனாக நடந்து கொள்ள முயற்சிக்கிறேன். க்கு ம TO கர்ம ரர்பல் வேலை - முரசொலி 9.9.97 ப