பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வழி மேல் விழி வைத்து... இருக்கிறார். அவருடைய கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ய 700 பேர் இருந்தார்கள். அந்த 700 பேருமே வேடர் குலத்தைச் சேர்ந்தவர்கள் - தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட் டவர்கள், அவர்களை வைத்துத்தான் அவர் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்; பக்தி ஒரு குலத்தவருக்கு மாத்திரம் உரிய தல்ல; எல்லோருக்கும் உரிய ஒன்று என்கின்ற அந்தக் கருத்தை, அவர்களை வைத்துத்தான் பிரச்சாரம் செய்தார். அவர்களிலே ஒருவர்தான் உறங்காவல்லிதாசர் என்பவர். ஒருநாள் ஆற்றிலே குளித்துவிட்டு இராமானுசர் வீதி வழியாக வரும்போது உறங்காவல்லிதாசருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த அந்தணர்கள் வெகுண் டெழுந்தார்கள், அவர்களைப் பார்த்து இராமனுசர் சொன்னார் - ஒருவனுக்கு கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, சாதிச் செருக்கு இந்த மூன்றும் கூடாது; உங்களிடத்திலே கல்விச் செருக்கு இல்லை; உங்களிடத்திலே செல்வச் செருக்கில்லை; ஆனால் சாதிச் செருக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டாமல், அவர் மிகுந்த சாதுர்யமாகச் சொன்னார் 'நான் அழைத்து வருகிறேனே, இந்த உறங்கா வல்லிதாசன் - வேடன்தான்; சாதாரண குலத்தில் பிறந்தவன்தான்; அவனிடத்திலே கல்விச் செருக்கு இல்லை; செல்வம் இல்லை, ஆகவே அந்த செல்வச் செருக்கும் இல்லை; அவனிடம் சாதிச் செருக்கும் இல்லை; காரணம், அவன் உயர்ந்த சாதிக்காரன் அல்ல; எனவே சாதிச் செருக்கும் இல்லை” என்று சொன்னார். சொன்ன வுடனே அந்தணர்களுக்கெல்லாம் அது புரிந்தது. தங்களைத் திருத்திக் கொண்டார்கள் என்பது இராமனுசருடைய வாழ்க்கை வரலாற்றிலே ஒரு பகுதி. - 1000 1000 இங்கே நீதியரசர் பேசும்போது திருக்கோட்டியூர் இராம னுசர், தான் குரு வென்று ஏற்றுக் கொண்ட, திருக்கோட்டியூர் நம்பியிடத்தில் பாடம் கற்க எவ்வளவு சிரமங்களை ஏற்றுக் கொண்டார் என்று குறிப்பிட்டார்கள். திருவரங்கத்திலிருந்து ஒரு