பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 121 முறை அல்ல; இருமுறை அல்ல; 18 முறை திருக்கோட்டியூருக்குச் சென்றிருக்கிறார், திருக்கோட்டியூர் நம்பியைச் சந்திக்க! ஒவ்வொரு முறையும் சந்திக்க நம்பி மறுத்துவிட்டார். 18-வது முறைதான் திருக்கோட்டியூர் நம்பி அவரைச் சந்தித்து, - அந்த மந்திரத்தை அவருடைய காதுகளில் ஓதி - "இதை உனக்கு ஓதியிருக்கிறேன்; நீ மோட்சத்திற்குச் செல்வாய்; வீடு பேறு அடைவாய்; இதை நீ யாருக்காவது சொன்னால் நரகத்துக்குத்தான் போவாய்; உனக்கு மோட்சம் கிடைக்காது" - என்று அவரை மிரட்டி வைத்தார். " அப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டு வெளியே வந்த 18 முறை பல கஷ்டங்களைச் சந்தித்து - கடைசியாகப் பெற்ற அந்த மந்திரத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு இராமனுசர் தான் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் என்று - எல்லோருக்கும் அந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டுமென்று - திருக்கோட்டியூர் கோபுரத் திலே ஏறி நின்று அந்த மந்திரத்தை திருக்கோட்டியூரிலே உள்ள எல்லா மக்களுக்கும் சொன்னதாகவும் - அதைப் பார்த்து குருநாதர் கோபித்துக்கொண்டதாகவும் என்னிடத்தில் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதை மீறிவிட்டாயே என்று சினம் அடைந்த தாகவும் - உடனே இராமானுசர் குருநாதரைப் பார்த்து "நீங்கள்தான் சொன்னீர்கள்; இதைக் கேட்டவருக்கு மோட்சம் கிடைக்கும்; அந்த ரகசியத்தை நான் வெளியிட்டால் எனக்கு நரகம் கிடைக்கும் என்று சொன்னீர்கள்; நான் பல மக்களுடைய மோட்சத்தைத் தான் விரும்புகிறேன்; அதற்காக நான் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை; என்னைத் தியாகம் செய்து கொள்கிறேன் - என்று குறிப்பிட்டார் என்பதும் இராமனுசருடைய வரலாறாகும். ( ( - எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது. நான் எழுதிய 'திரும்பிப்பார்” என்ற ஒரு திரைப்படத்தில் - ஒரு உரையாடல், திருந்தவே முடியாதவனாக இருந்த ஒரு தீயவன் கடைசியாக திருந்தி தன்னைப் பற்றி - தன்னுடைய குறைகளைப் பற்றி தானே