பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வழி மேல் விழி வைத்து... விழாவாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை; அது மணவிழா நிகழ்ச்சியாக இருந்தாலும் பரிசளிப்பது, அன்பளிப்பு வழங்குவது, மாலை மரியாதை செய்வது என்ற இவற்றுக்குப் பதிலாக நூல்களை வழங்குவதை கன்னிமாரா பொது நூலக நூற்றாண்டு விழாவிலே யிருந்து நாம் தொடங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் (பலத்த கைதட்டல்) நூலகம் அமைத்தல், படிப்பகம் அமைத்தல் இவை எத்துணை பயனுடையது என்பதை நான் என்னுடைய பொது வாழ்க்கையிலேயே கண்டவன். நான் இளம் மாணவனாக இருந்த காலக்கட்டத்தில் திருவாரூரில் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் என்று ஒரு அமைப்பை உருவாக்கி ஒரு சிறிய ஓலைக் குடிசையிலே அந்தச் சங்கத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அந்தச் சங்கத்திற்குள்ளே யும் பத்து, பதினைந்து நூல்கள் - பெரியவர்கள், பெருமக்கள் எழுதிய நூல்கள் - அங்கே படிப்பதற்கென்று இருந்தது உண்டு. அதன் பின்னர், 45, 46ஆம் ஆண்டுகளில் நான் கோவையில் - திரைப்படத் தொழிலில் ஈடுபாடு கொண்டு அங்கே கோவைக்கு அருகேயுள்ள சிங்காநல்லூரில் வாழ்ந்து வந்தேன். அந்தச் சிங்காநல்லூர் பகுதி, அந்தக் காலக்கட்டத்தில் ஒரு பயங்கரமான வன்முறைப் பகுதி. அங்கேதான் எனக்கு வீடு கிடைத்தது. குடும்பத் தோடு நான் அங்கே வசித்துக் கொண்டிருந்தேன். அங்கே இருந்தா லுங்கூட, நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை, அந்தப் பகுதி யிலே பரப்பிட வேண்டுமென்ற அவா எனக்கு மிகையாக இருந்தது. ஆனால் அந்த ஆவலை வெளியிட்டால் உயிருக்கே ஆபத்து என்பது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட இடம். அங்கே ஒவ்வொரு நாளும் ஒரு கொலை விழும் - அரசியல் கொலை. கா QULUC அந்த இடத்திலிருந்து நான் திரைப்படத் தொழிலில் வசனங்களை எழுதுகிற, திரைக்கதை எழுதுகிற அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருந்தபோது - எனக்கொரு நண்பர் அங்கே கிடைத்தார். அவர் பெயர் அண்ணாசாமி. அவரும் நானும் நெருங்