பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 "விலங்கின் விலை தெரியுமா உனக்கு? உயிர் கழிந்து உடல் கிடப்பினும் ஆபரணமாகும் புலியின் நகம் எழுகோல் ஆகும் புறாவின் இறகு" என்று எழுதியிருக்கிறார். வழி மேல் விழி வைத்து... 6A (AR) புலியைக் கொன்று போட்டால் கூட அதன் நகம் நமக்கு ஆபரணமாகும். புறாவைச் சுட்டுப் போட்டால் கூட அதன் இறகு எழுதுகோலாகும் என்று சொல்ல வந்தவர் - சொல்லியிருக்கிறார் ஆனால் அச்சுக் கோத்தவர்கள் எழுதுகோல் என்பதற்குப் பதிலாக எழுகோல் என்று அச்சடித்திருக்கிறார்கள். அதை பிழை திருத் தும் போது கவனிக்காமல் வெளி வந்திருக்கிறது. நான் படித்து விட்டு உங்களிடம் சொல்கிறேன். புத்தகத்தில் எழுதுகோல் என்ப தில் “து" என்ற எழுத்தைக் காணோம். அதை “தூ” வென்று விட் டார்கள் போலும்! 'திரும்பத் திரும்பத் திருத்தியும் திருத்தியும் முற்றும் பிழை நீக்க முடியவில்லை" என்று கவிதையிலே முதலிலே எழுதியிருக்கிறார் அல்லவா; அதற்கு உதாரணமாக இது திகழ்கிறது (கைதட்டல்) ( கேள் மனமே கேள்' என்ற கவிதைக்கு பொன்மணி இங்கே முன்னுரை தந்து -அலாவுதீனுக்கு எதிரே வந்த பூதம் போல ஒரு பூதம் வந்தால் - விளக்கைத் தேயக்கும் போது பூதம் வந்தால் என்ன கேட்பேன் என்று கூறுகின்ற அந்தப் பாடலில் வைரமுத்து சொல்கிறார். “உலகெங்கும் சம பங்கு மழையைக் கேட்பேன்”