பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 167 பட்டுள்ளன என்று என்னிடம் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் குறிப்பிட்டார் 1006 O இதைத்தான் இன்றைக்கு இந்த அரசு கிராமப்பகுதிகளில் 'நமக்கு நாமே' என்ற தலைப்பில் நிறைவேற்றி வருகிறது நம்முடைய காரியங்களை நாமே செய்து கொள்ள வேண்டும். நம்முடைய நன்மைகளுக்காக நம்முன நம்ம நம்முடைய மக்களுக்காக நாமே கடமை ஆற்ற வேண்டும் என்ற அந்த உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் கிராமப் பகுதிகளில் 'அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' என்றும் 'நமக்கு நாமே திட்டம் என்றும் இரண்டு திட்டங்களை கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதை நிறைவேற்றிக்கொண்டு வருகிறோம். நாளைக்குக் கூட அந்தத் திட்டங்களை நாமக்கல் மாவட்டத் தில் நாங்கள் சென்று நிறைவேற்ற இருக்கிறோம். இத்தகைய உணர்வு எல்லா மக்களிடத்திலும் வருகின்ற வகையிலே ஒரு விழாவைக் கூட நமக்கு நாமே என்ற அளவில் நடத்திக் காட்ட முடியும் என்று முதன்முதலாக தமிழகத்திற்கு அறிவித்திருப்பதும் சேலம்தான் என்பதை எண்ணும்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். கற்றம் ங்க தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எந்தக் காரியத்தை எடுத்தாலும் சோடை போகாமல், சொத்தையாகாமல் சூரத்தனமாக அனைவருக்கும் எடுத்துக்காட்டாக, மற்றவர்கள் கடைப்பிடிக்கக் கூடியதாக, மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளக்கூடியதாக அமைத்துக் காட்டுவதில் வல்லவர் என்பதை அண்மையில் அவர் நடத்தி முடித்த மாநில மாநாட்டிலேயே இந்த நாடு புரிந்து கொண்டிருக்கிறது. ம எந்த மாநில மாநாடு என்றெல்லாம் நான் சொல்ல விரும்ப வில்லை. காரணம் கவர்னரை வைத்துக்கொண்டு அதையெல்லாம் பேசக்கூடாது என்பது அரசியல் நாகரிகம். எனவே, அத்தகைய