பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 189 இப்படி அரசியல் துறையிலே நானும் அவரும் நெருங்கிப் பழகுகின்ற காலக் கட்டம் இருந்தது. ஆட்சிப் பொறுப்பை அண்ணா ஏற்றவுடன் பேரவைத் தலைவராக ஆதித்தனார் பொறுப்பேற்றார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு என்னுடைய தலைமையிலே அமைந்த அமைச்சரவையிலே ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அவர் தமிழர்களுக்காக நடத்திய கிளர்ச்சிகள் ஒன்றிரண்டு அல்ல. நெல்லைச் சீமையிலே பனைமரத் தொழிலாளர்களுக்காக கிளர்ச்சி நடத்தி கைதானவர். செங்கற்பட்டு விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியதோடு கைதாகி, கையிலே விலங்கிடப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டவர். இன்னொன்று எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமை. 65-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் ஆதித்தனார் அவர்கள் கோவையிலே தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டார். நான் பாளையங்கோட்டையிலே தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டேன். அன்றைக்கு தமிழகத்திலே பாதுகாப்புச் சட்டத்தின்படி தனிமைச் சிறையிலே அடைக்கப் பட்டவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் ஆதித்தனார். மற்றொருவர் நான். (கைதட்டல்) இருவரும் விடுதலை பெற்ற பிறகு, சந்தித்துப் பேசி தி.மு. கழகத்தின் அரசியல் மேம்பாட்டிற் கான ஆக்கப்பூர்வமான யோசனைகளை எல்லாம் அண்ணாவிடம் சொல்லி, அண்ணா அவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு ஆதித்தனார் அவர்களை நேசித்த அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இன்றைக்கும் என்னுடைய நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக் கின்றன. குப் ல பத்திரிகைத் துறையிலே ஒரு புதுமையை புகுத்தினார். எனக்கு முன்னால் இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் எடுத்துக் காட்டினார்களே, அவர் பத்திரிகையிலே செய்தி எப்படிப் போட வேண்டும், எது செய்தி? என்பதைப் பற்றி ஒரு கருத்தைச் சொல்லி