பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வழி மேல் விழி வைத்து... பேற்றிருந்தவர்வாய்த்திருப்பதும் அவர்கள் வாயால் என்னை வாழ்த்தியிருப்பதும் என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி களாகும். இத்தகைய வாய்ப்புகளையெல்லாம் உருவாக்கித் தந்த நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களை என்ன பாராட்டினாலும் அ தகும். நான் 1924 ஆம் ஆண்டு பிறந்தேன். பிறந்தபோதே என் வீட்டில் கள்வர்கள் புகுந்து, என் தாயின் தாலிச் சரடு உட்பட அத்தனையையும் திருடிச் சென்றார்கள். அப்பொழுதும் நான் அழாமல் இருந்த காரணத்தால் தப்பித்தேன். அழுதிருந்தால் என் குரல்வளையில் கட்டை விரலை வைத்து நசுக்கியிருப்பார்கள். நல்ல வேளையோ அல்லது என் போதாத காலமோ அழாமல் இருந்துவிட்டேன். இன்றைக்கு சுகம், துக்கம் இவைகளை யெல்லாம் அனுபவிப்பது மாத்திரமல்ல. அவைகளுக்கிடையே மொழிக்கும் நாட்டிற்கும் தொண்டாற்றுகிறேன் என்கின்ற அந்த இன்பத்தைப் பெறுகிறேன் அல்லவா? அதற்காக அந்தக் கள்வர்களின் கட்டை விரலை வாழ்த்துகிறேன். என் கழுத்திலே அதை வைத்து அழுத்தாமல் இருந்ததற்காக! - என்னோடு இணைந்து இன்றைக்கு என்னுடைய சகோதரர் நாவலாசிரியர் எழுத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பொறித்துக் கொண்டிருப்பவர் - பிரபஞ்சன் அவர்களும் விருது பெற்றிருக்கிறார். அவருடைய அண்ணன் என்ற முறையில் நான் அவரை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்த சிவந்தி அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டுமென்று வாழ ஆசைப்படுகிறேன். ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டுமென்பதற்காக அல்ல. அதிகாரங் களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக அல்ல. தமிழுக்குத் தொண்டு செய்வதற்காக, என்னுடைய கண்கள் இறுதியாக மூடும்