பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அவதாரமெனில் அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன்... வழி மேல் விழி வைத்து... ma@ma : பிறவாதவனுக்கா பிறப்பிடம் தேடுவீர்? அயோத்தி ராமன் மனிதன் தான் என்றால் கர்ப்பத்தில் வந்தவன் கடவுள் ஆகான்" க கர்ப்பத்திலே வந்தவன் கடவுளாக இருக்க முடியாது. அவதாரங்கள் கர்ப்பத்திலே வராது. ஆகவே கடவுளாக இருக்க முடியாது. ப்பை அதற்குப் பிறகு கவிஞர் தன் ஊரிலே ஓடிய ஒரு நதியைப் பற்றி பரிதாபமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். பொன்மணி அதைப்பற்றிச் சொல்லும்போது, பொன்மணிக்கும் கண் கலங்கி, அந்த நதியைப் பற்றிப் பாடும்போது தம்பி வைரமுத்துவிற்கும் கண் கலங்கி, அதைக் கேட்கும்போது எங்கள் ஊர் நதியை நினைத்துக் கொண்டு என்னுடைய கண்ணும் கலங்கியது. அதிலே சொல்கிறார். “பால் நுரைக்கும் பௌர்ணமி ராத்திரியில் இருவ நிலவைக் கரைத்துக் கொண்டு வெள்ளையாய் ஓடியதும் எரிந்த மரங்களின் கரிகள் சுமந்து இரவின் திரவம் போல் கேக்ப்படிங்க க கறுப்பாய் ஓடியதும் (இரவின் திரவம் என்கிறார். பெரிய சொல்லாட்சி அது) "