பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வழி மேல் விழி வைத்து... செய்தார்கள். தெனாலிராமன் கொலுமண்டபத்திற்கு வந்தான். "எங்கேயப்பா இந்திரலோகத்து பட்டுச் சேலை?" என்று மன்னன் கேட்டான். ஒரு சிறிய குங்குமச் சிமிழ் போன்ற பாத்தி ரத்தைக் காட்டி, "இதற்குள்ளே இருக்கிறது" என்று சொன்னான். "எங்கே எடு பார்ப்போம்” என்றான் மன்னன். அந்தச் சிமிழைத் திறந்து ஏதோ ஒன்றை இழுப்பதைப் போல பாவனை செய்து - இதுதான் இந்திரலோகத்துக்குச் சேலை என்றான். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லை. வெறும் கையாலேயே முழம் போட்டு 'அறுபது முழம் இருக்கிறது பாருங்கள்' என்றான். மன்னன் திகைத்தான். சொல்லிவிட்டு உடனடியாக தெனாலிராமன் சொன்னான். "இது பகுத்தறிவு உள்ளவர்களுடைய கண்களுக்குத் தான் தெரியும்" என்று சொன்னான். உடனே மன்னன், தெரிய வில்லை என்று சொன்னால், தனக்கு பகுத்தறிவு இல்லை என்றாகி விடுமே என்பதற்காக, "ஆஹா, அருமையாகத் தெரிகிறது, நல்ல வண்ணம், வெகு அழகாக இருக்கிறது" (பலத்த சிரிப்பு) என்று கூறி, அமைச்சரைப் பார்த்து, 'உங்களுக்குத் தெரிகிறதா?" என்று கேட்டான். அமைச்சரும் தனக்குத் தெரியவில்லை என்று சொன் னால், தன்னுடைய அறிவைப் பற்றிச் சந்தேகப்படுவார்கள் என்று பயந்து, "அழகாக இருக்கிறது, அருமையான சேலை" என்றான். " " கொலு மண்டபத்திலே உள்ள ஒவ்வொருவரும் அப்படியே ‘ஆஹா, பிரமாதம், பிரமாதம்” என்று சொன்னார்கள். பத்தாயிரம் வராகன் எள்! அதைப்போல, இந்தக் ஹைக்கூ கவிதைகள் கவிதை உணர்வு உள்ளவர்களுக்குத்தான் தெரியுமென்று சொல்லிவிட்டு - உங்களுக்கு தெரிகிறா என்று கேட்டால், நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று கரம் தூக்கி - எங்களுக்குத் தெரிகிறது, தெரிகிறது என்று நிச்சயமாக சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் - இது இப்போது புரியாமல் இருந்தாலும், அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி