பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 33 நூல் வெளியிடப்படுகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். huo ia "புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான் மேசைகளின் மீதிருந்து" To (ங்கப 100 இதுதான் வியப்புக்குரியது. இரண்டு வரிகளுக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது வரி! புயலுக்குப் பிறகு சிறுவன் ஆகாயத்தை துடைக்கிறான் - மேசைகளின் மீதிருந்து! இதை ஆங்கிலத்தில்... "after the strom a boy wiping the sky from the Tables" இதற்கு தமிழாக்கம்தான் நான் இங்கே முன்பு குறிப்பிட்ட தாகும். புயலுக்குப் பிறகு சிறுவன் ஆகாயத்தை எப்படி துடைக்க முடியுமென்றால் - புயலால் பாதிக்கப்பட்ட ஆகாயம் - ஆகாய வெளியிலிருந்து சிதறிய பல பொழிவுகள் - இவைகள் எல்லாம் சிந்திய அந்த மேசையை அவன் துடைக்கிறான் என்பதிலிருந்து புயலால் ஏற்பட்ட விளைவுகளை கவிஞன் அழகாக சித்தரித்திருக் கிறான் என்பது புரிகிறது " "ஹைக்கூ என்பது நம்மை அழைக்கும் கைச் சைகை, பாதி திறந்த ஒரு கதவு, தூய்மையாய்த் துடைக்கப்பட்ட ஒரு கண்ணாடி" என்று 'பிளித்' குறிப்பிடுவதையும் நம்முடைய நிர்மலா சுரேஷ் அவர்கள் வெகு அழகாக இந்நூலிலே விளக்கிக் காட்டி ஹைக் கூவின் தனித் தன்மையை விளக்கியிருக்கிறார். நம்முடைய டாக்டர் சி.பா. அவர்கள் இங்கே விளக்கியதைப் போல இதிலே மூன்றாவது வரிதான் அதனுடைய தனித்தன்மை! "உதிரும் மலரொன்று மீண்டும் கிளைக்குத் திரும்புகிறகோ: