பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 39 கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியிலே சந்தித்திருக்கிறேன் அதற்கு முன்பெல்லாம் தொலைக்காட்சியிலே செய்தி வாசிப்ப வராக அவரைக் கண்டிருக்கிறேன். தொலைக்காட்சியிலே செய்தி வாசிக்கும்போது - அப்போதெல்லாம் தொலைக்காட்சி ஒருதலைப் பட்சமாகவே செய்திகளை வாசிக்கும். அதனால் செய்தி வாசிப்ப வர்கள் மீதே நமக்கெல்லாம் ஒரு கோபம் இருக்கும். அந்தப் பார்வையோடு நிர்மலா சுரேஷை ஒரு விழா மேடையிலே சந்தித் தேன். அவர்கள் பேசி முடிந்த பிறகு, நான் பேசும்போது, ஏதோ கிண்டலாகவோ, தாக்குதலாகவோ ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டேன். மனம் புண்படும் படியாக அல்ல; அவர் சிந்திக்கும் படியாக! நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் என்னைப் பார்த்து - “என்ன அப்படி சொல்லி விட்டீர்களே, என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? "நான் திருச்சி இருதயராஜ் அவர்களின் மகள் அல்லவா? என்று சொன்னார்கள். சொன்னதும், எனக்கு எத்தனையோ ஆண்டு கால நினைவுகள் நெஞ்சிலே நிழலாடின. திருச்சியிலே இருதயராஜ் என்பவர், பேரறிஞர் அண்ணா அவர்களின் நெருக்கமான நண்பர். அண்ணா அவர்கள் திருச்சிக்குச் செல்லும் போதெல்லாம். இருதயராஜ் அவர்களை அழைத்து, அவரோடு உரையாடாமல் இருக்க மாட்டார்கள். வரலாற்று ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமுதாய ரீதியாக பல கருத்துக்களை அவரோடு கலந்து உரையாடு வார்கள். அப்போதெல்லாம் நானும் பக்கத்திலே இருந்து இருதய ராஜ் அவர்களோடு பழகியிருக்கிறேன். அந்த முறையில் - நிர்மலா சுரேஷ், எனக்கு அருமை மகள் (பலத்த கைதட்டல்) என்னுடைய அன்புச் செல்வி. அந்த செல்வி ஒரு சிறப்பு வாய்ந்த கவிஞராக - அதற்கு மேலாக சிறப்பு வாய்ந்த கவிதைகளை எல்லாம் ஆராய்ந்து, ஆராய்ச்சி செய்து ஒரு நூலை வெளியிடுகிறவராக - அதுவும் நூறு, இருநூறு பக்கங்கள் அல்ல; 444 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை