பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வழி மேல் விழி வைத்து... BOUR. நோயாக அவர்கள் வளர்ந்து வருகிறார்கள். அந்தக் கொடிய நோய் தடுக்கப்பட்ட - அதன் கோரப்பிடியிலிருந்து நமது மக்கள் விடுவிக் கப்பட சபதம் ஏற்கும் ஆண்டாக இந்தப் பொன்விழா ஆண்டு அமைந்திடல் வேண்டும் - - இருள் மழை புயல் இவற்றுக்கிடையே மின்னல் வெளிச்சத்தில் வழி தெரிந்து நடப்பதைப்போல இந்த ஐம்பதாண்டு காலமாக இடையில் வந்த நெருக்கடி நெருப்பாற்றையும் கடந்து நிற்பதுதான், நமது இந்திய நாட்டின் ஜனநாயகமாகும். ஒரு துணைக் கண்டம் எனக் கூறப்படும் இந்தப் பெரிய நாடு, பெரிய ஜனநாயக் க நாடாகவும் திகழ்ந்து, மற்ற பல நாடுகளுக்கு மத்தியில் தனது மதிப்பை உயர்த்திக் கொண்டிருப்பதை இந்தப் பொன் விழா ஆண்டில் நினைத்துப் பூரிப்புக் கொள்கிறோம். மக்களாட்சியின் மாண்புக்குத் தமிழகத்தில் சங்க காலத்தி லேயே அடையாளம் உண்டு என்பதை நமது இலக்கியங்கள் அறிவிக்கின்றன. ஊராட்சித் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது. உள்ளாட்சி மன்றங்களில் ஊனமுற்றிருந்த ஜனநாயகத்தைக் குணப்படுத்தி, கடந்த ஆண்டு நடமாட வைத்த பெருமை உங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்கு உண்டு. அந்த உள்ளாட்சிகளுக்குத் தேவையான நிதியும் - போதுமான அதிகாரப் பொறுப்புகளும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. - கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடி கள் சொன்ன வாசகத்தை மறவாமல் - நாடு, நகரம், கிராமம், குக்கிராமம், பட்டி தொட்டி அனைத்திலும் இந்த அரசின் பணிகள் பரவலாக நடைபெறுவதற்கு கட்சிச் சார்பற்ற முறையில் அனைத்து மக்களின் அன்பான ஆதரவும் வேண்டப்படுகிறது. அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர், சாலை வசதி, மின்சாரம், மருத்துவ வசதி, உணவு, உடை, உறையுள்