பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வழி மேல் விழி வைத்து... வேண்டிய நெருக்கடியான நிலை இருந்தபோதிலும், அவற்றை யெல்லாம் விட இது பெரும் பணி, சிறப்பான பணி, செய்து முடிக்க வேண்டிய பணி, தொடர வேண்டிய பணி என்ற தூய உள்ளத்தோடு இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சிரமம் பாராமல் வந்துள்ள கட்சிகளின் தலைவர்களையும் சமயச் சான்றோர்களையும் நான் மீண்டும் மீண்டும் வரவேற்று நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ம இங்கு நடைபெற்றது ஒரு மாநாடு அல்ல; ஒரு கருத்தரங்கம் என்ற கருத்தினை முன்னால் பேசியவர்கள் எல்லாம் வெளி யிட்டார்கள். 601 எனக்கே கூட, வந்து அமர்ந்ததிலிருந்து, நான் பேசுவேன் என்று அழைக்கப்படுகிற வரையில் என்ன பேசுவது என்று சிந்தனை செய்வதற்கே நேரமில்லாமலே போயிற்று. காரணம், சில மாநாடுகளில், சில கருத்தரங்குகளில், சில பேச்சரங்கங்களில் பேசுகின்ற நண்பர்கள் அல்லது தலைவர்கள், நம்மைப் போன்ற வர்கள் மேடையில் அமர்ந்து சிந்திப்பதற்கு நேரம் தருவார்கள். ஆனால் இங்கே பேசிய தலைவர்கள் யாரும் அந்த நேரத்தை எனக்குத் தரவில்லை. காரணம் அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் ஒன்றிப் போனேன்; இணைந்தேன்; கலந்தேன்; கசிந்துருகினேன். ஐம்பதாண்டு காலமாகிறது; இந்தியத் திருநாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து; நாம் விடுதலைப் பெற்று ஐம்பதாண்டு காலத்திற்குப் பிறகும் நாம் நம்முடைய சமுதாய மக்கள் மற்றொரு சுதந்திரத்திற்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கிறதே, என்பதை எண்ணிப் பார்க்கும்போதும், அந்த சூழ்நிலையை எப்படி செப்பனிட்டு செயல்படுத்துவது, எவ்வாறு அவர்களுக்கு அந்த விடுதலையைப் பெற்றுத் தருவது? என்பதை எண்ணும் போதும், ஒரு பொறுப்பில் இருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு எவ்வளவு கவலையும் வேதனையும் இருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.