பக்கம்:வழுக்கு நிலம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ரா. சீனிவாசன் 'விளக்கிச் சொன்னேன். அவரைப் பார்க்கவே பயப்படுகிறாள். அவர் ஏன் வந்தாய்? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று பயப்படுகிறான்." "அவர் அப்பாதான் அழைத்துக் கொண்டு வந்தார் என்று சொன்னால் போகிறது. அவசரமாகத் திரும்பிப் போக வேண்டி இருந்ததால் போய் விட்டார் என்று சொல்வது. நாம் கடிதம் எழுதிய விஷயம்கூட அவனுக்கு ஏன் சொல்ல வேண்டும்? அவன் நடத்தையை நேரில் கண்டித்தால் அவன் எப்படித் திருந்துவான்? விரோதம்தான் வரும். அவன் திருந்து வதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உன் நடத்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் நீ யார் கேட்பதற்கு என்று எதிர்த்துக் கேட்டால் நாம் என்ன செய்யமுடியும்? போய்யா! உன் வீட்டைக் காலி செய்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டால் பிறகு நாம் அவனை எப்படித் திருத்த முடியும்? பாவம், அந்தப் பெண்ணைப் பார்த்தால் எனக்கும் பரிதாபம் ஏற்பபடுகிறது. ஒன்றும் தெரியாதவள். அவளுக்கு நாம் உதவவேண்டுமானால் அவசரப்பட்டு எதுவும் பேசிவிடக் கூடாது. நாம்தான் அவன் மனைவியை வரவழைத்தோம் என்று சொன்னால் நம்மீது பகை கொள்வான். கடிதம் எழுதும்போது அவன் பகைக்கு நான் பயப்படவில்லை. இந்த வீட்டைக் காலி செய்விக்க வேண்டும் என்று பகையை வரவேற்றேன். இந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு இவளை வாழ்விக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் அவன் பகை இல்லாமலேயே அவனைத் திருத்த வேண்டும். அதுதான் நல்லது. இந்தச் சிறு பொய்யைச் சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன்." "ஏதோ அவர்களுக்குள் வேறு தகராறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவள் அவனைச் சந்திக்கப் பயப்படுகிறாள். இங்கே தங்குவதற்குத் தயங்குகிறாள். அவள் பேசிய பேச்சிலிருந்து தெரிகிறது." "இருக்கலாம். அதைப் பற்றி அந்தப் பெண் ஏதாவது சொன்னாவா?” "இல்லை." "சரி. அதை ஒன்றும் கண்டுகொள்ள வேண்டாம். அப்பாவே அழைத்துக் கொண்டு வந்து விட்டதாகச் சொல்லச் சொல். இந்த ஒரு சிறு பொய் நமக்காகச் சொல்லும்படி செய். அதுதான் நல்லது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/168&oldid=898132" இலிருந்து மீள்விக்கப்பட்டது