பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் எனில்இங்கு நானடைதல் வியப்பன்றே" என்பது திருவருட்பா. அண்மையில் வாழ்ந்து இலக்கியம் பாடிய மனேன்மணிய ஆசிரியராகிய சுந்தரம்பிள்ளை அவர்கள், 'மனம்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தின் மாண்டோர்கள் கனஞ்சடையென்றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ" என்று திருவாசகம் பயின்ருர், இறைவனை அடைய வேறு முயற்சிகள் செய்யவேண்டுவதில்லை எனக் காட்டி இதன் பெருமையை விளக்குகிருர். 'திருவாசகத்துக் குருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகாதார்' என்பது நாடறிந்த நல்ல பழமொழி. இவ்வாறு பண்டுதொண்டு இன்றுவரை நல்லவர் களால் பாராட்டப்பெற்ற வாசகம் பாடிய மாணிக்கவாசகர் தம் வரலாறு நாட்டில் நன்கு விளக்கப்பெறவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகில் மக்களினம் வாழ அரும்பாடுபட்டவர்தம் வரலாறுகள் நன்கு வரையப்பட வில்லை என்பது உண்மை. தம்மை உலகுக்கு விளம்பரப் படுத்திக்கொள்ளாது, தமது கடமை இது' என உணர்ந்தும் உணர்த்தியும் வாழ்ந்த பல பெரியவர்களைப்பற்றி நம்மால் அறியமுடியவில்லை. சிறப்பாகத் 'தமிழ் நாட்டில், தம்மை அறிவிக்காது தலையாய பணிசெய்த நல்லவர் வரலாறுகளை நாம் காண முடியவில்லை. ஊரும் பேருமற்ற வகையிலேயே தமிழ்நாட்டுப் பெரும் புலவர்கள் இன்றுவரை தத்தம் பாடல்களாலும் பண்புகளாலுமே வாழ்ந்துவருகிருர்கள். அத்தகையை வரிசையில் வைத்து எண்ணப்படத் தக்கவர் மாணிக்கவாசகர். மணிவாசகருடைய வாழ்க்கையைப்பற்றிய குறிப்பு ஒன்றுமே இல்லை என்ருலும் கவலை இல்லை. அவருடைய