பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-3 117 றேனே! எனக்கு உய்தியே இல்லையா என்றும் மீளாத் துயர்தானே! சொக்கேசா! என் மனைவி-கோப்பெருந்தேவி கனவு கண்டு, வருவதை உரைத்தபோது, அதைக் கொள்ளாது தள்ளினேனே! நீ அடித்த அடி இத்துணை பலமாக என் மீது விழும் என எண்ணவே இல்லையே! எந்தாய். என் குடிக்கு ஒரே குலவிளக்காய்-கொழுந்தாய்-வருங் காலத்தில் இப்பாண்டி நாட்டை ஆளவல்லதாய் இருந்த செல்வத்தின்மேல் பட்ட அடி, அதன் உயிரையே உடன் கொண்டு சென்று விட்டதே. அந்தோ! அரசி ஆற்று வாரற்றுத் தேசய்ந்து சாம்புகின்ருளே பிழைக்க வழி யில்லையோ? ஆம் வேண்டும் எனக்கு, இதுவும் வேண்டும், இன்ன மும் வேண்டும். நான் செய்த கொடுமைகளுக்கு இந்தத் தண்டனை போதாது. ஆம்! நல்லவர்மீது பழி சுமத்தி னேன். நல்லவர் புகழ் கண்டு பொருமை அடைந்தேன். நல்லவர் வாழ்வைப் பாழாக்கினேன். அல்லவர் உறவை விரும்பி மேற்கொண்டேன். நாட்டில் என்கீழ் உள்ள மக்களை அந்தப் பொல்லாதவர் வழியே தொல்லைக்குள் ளாக்கினேன். மாணிக்கவாசகரைப் பிரிந்த நாள் சிறிதேயாயினும் அதற்குள் நான் இழைத்த கொடுமை கள் எத்தனை? என் நாட்டைத் தீமைகளிலிருந்து விடு விக்க, எனக்கு வாழ்வில் உயர்வை கொடுக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தாம் எத்தனை எத்தனை? அனைத்துக்கும் பதிலுக்கு நான் செய்தது என்ன? அவர் மேல் பழி சுமத்திச் சிறையிலிட்டேன். அவரை வையைப் பெருமணலில் கொடிய வெய்யலில் ஈர்த்திட் டேன். நாட்டு மக்கள் அவ்வப்போது என்னைப் பழித்ததும் ஒற்றர்கள் வாயிலாக நான் உணர்ந்தேன். என்ருலும், அரசபோகமும் பதவி ஆணவமும் என் கண்களை மூடி விட்டன. ஆம்! அதற்குப் பயன் என் ஒரே மகனை இழந்து மதிகெட்டமை. உலகம் என்னைக் கண்டாவது