பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வழுவிலா மணிவாசகர். யான் அது அறியாதே கெட்டு உங்களுக்கே தீங்கிழைத் தேன். எனக்கும் தங்கள் மன்னிப்புக் கிட்டுமோ! (அழுகிருன்.) மாணி : எழுந்திருங்கள். நீங்கள் செய்த அனைத்தும் என்னைப் பொறுத்த வரையில் எனக்கு நன்மையாக முடிந்தன. நான் இதுவரையில், ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனப் பணியாதே கிடந்து விட்டேன். என் தவறுகண்டு ஆண்ட்வனே வந்து உணர்த்தின்ை. ஒரு வேளை நீங்களெல்லாம் இந்த நன்மைகளைச் செய்யா திருந்தால், நான் ஒருவேளை ஆண்டவனே மறந்து மறு படியும் அல்லல் வாழ்வில் மூழ்கி இருந்பேன். நீங்கள் செய்த அந்தச் செயல்கள்தாம் என் கண்ணேத் திறக்க வைத்தன. அது மட்டும்ா? எனக்குக் காட்சி தந்து மறைந்த அந்த இறைவன், எனக்கு மிக நெருக்கமாக வர வாய்ப்பையும் உண்டாக்கினர்கள். அதுமட்டுமா? இம் மதுரை மாநகர மக்கள் அனைவரும் அவன் ஆடல் கண்டு உருவு காண உணர்ந்து போற்ற வாய்ப்பளித்தீர் கள். எனவே நீங்கள் எனக்குச் செய்த அத்தனையும் நன்மையே அன்றித் தீமையென்று யாரே சொல்ல 6)16ü6))mtrio? அரச இதல்ை தங்கள் உயர்ந்த பண்பும் இறையுள்ளமும் தெரிகின்றது. ஆனல், நாங்கள் செய்த தவறுகள் எங்கள் உள்ளங்களை வாட்டுகின்றன. . மாணி : வாடவேண்டாம். என்ன உண்மையில் வாழ வைத் தவர்கள் நீங்கள். அடிமை வாழ்வில் பட்டுழன்ற எனக்கு உரிமை வாழ்வை-விடுதலையைத் தேடித்தந்தவர்கள் நீங்கள். நான் திகைத்தேன்-தேற்றினீர்கள்-தெளிவித் தீர்கள். என்னினும் நீங்கள் உயர்ந்தவர்கள். குதிரைச் சேவகளுக வந்தபோதும், மண் கொட்ட வந்தபோதும்